முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

மலை அடிவாரத்தில் இருந்து மேலே செய்வதற்கே 1 மணி நேரம் முதல் 4 மணி நேரம் ஆகும்போது அடிவாரத்திற்கு ரயில் அல்லது  பேருந்து மூலம் பயணிப்பது பற்றி நினைத்தாலே சோர்வு  தட்டும்

 • 16

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  பொதுவாக மலை பிரதேசத்துக்கு போவது என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் அதற்கு ஆகும் பயண நேரத்தை நினைத்தே பலர் மலை பிரதேசங்களுக்கு போக யோசிப்பர். மலை அடிவாரத்தில் இருந்து மேலே செய்வதற்கே 1 மணி நேரம் முதல் 4 மணி நேரம் ஆகும்போது அடிவாரத்திற்கு ரயில் அல்லது  பேருந்து மூலம் பயணிப்பது பற்றி நினைத்தாலே சோர்வு  தட்டும். ஆனால் விமான நிலையத்திற்கு அருகிலேயே சில மலைவாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  மதமும் மலையும் பனியும் அழகும் இணைந்த இடம் தான் தர்மசாலா. உத்தரகாண்டில் இமைய மலை பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு 13 கிமீ தொலைவில் காங்க்ரா விமான நிலையம் உள்ளது.  அதிகபட்சம் 30 நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து தர்மசாலா வந்துவிடலாம். சுற்றி பார்க்க தாராளமாக நேரம் கிடைக்கும்

  MORE
  GALLERIES

 • 36

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  அடுத்து சொல்ல இருக்கும் இடமும் உத்திரக்கண்ட் மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. இளையமலைகளின் இடையே அமைந்துள்ள டெஹ்ராடூன் நகரத்திலேயே விமான நிலையம் அமைந்துள்ளது ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இறங்கி 30 கிமீ தோற்றத்தை 1 மணி நேரத்தில் கடந்தால் இயற்கை எழில் நம்மைக் கொஞ்சக் காத்திருக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  வடகிழக்கு இந்திய என்பது பசுமையான இயற்கையின் தொட்டில் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக பூட்டான், நேபால் நாடுகளுடன் எல்லையை பகிரும் சிக்கிமில் உள்ள சுற்றுலா தளத்தை பற்றி சொல்லவே தேவை இல்லை.  கேங்டாக் மாகாணம் சுற்றுலாத் தளங்கள் நிறைந்தது. அங்கு செய்வதற்கு பாக்யோங் விமான நிலையத்தை பயன்படுத்தலாம். 27 கிமீ தூரத்தை அதிகபட்சம் 1 மணி நேரத்தில் கடந்து விடலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  குளிர்காலத்தில் பனிப்பொழியும் இடமான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள குல்மார்க் குளிர் மற்றும் வெயில் காலம் என்று எல்லாவற்றிற்கும் ஏற்றது. இங்கு செல்வதற்கு குல்மார்க் நகரத்துக்கு 58 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையம் சரியாக இருக்கும். 1- 2 மணி நேரத்திற்கும் குல்மார்க் சென்று சேரலாம்

  MORE
  GALLERIES

 • 66

  விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?

  குளிர்ப்பிரதேசம், ஹனிமூன் ஸ்பாட் என்று தேடும்போது அந்த பட்டியலில் டார்ஜிலிங் நிச்சயம் இடம்பெறும். அப்படிப்பட்ட அழகுகொஞ்சும் மேற்கு வங்க மானித்தின் சுற்றுலத் தலத்திற்குச்  செல்ல கொல்கத்தா விமான நிலையத்தை விட பாக்டோக்ரா விமான நிலையம் பக்கத்திலேயே இருக்கும். 70 கிமீ தூரம் உள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சம் 2.30 -3 மணி நேரத்தில் டார்ஜிலிங் அடையலாம்.

  MORE
  GALLERIES