மலை, கடல், தீவு வாழ்க்கை, புத்த மத சாரல், அதே போல இந்தியக் கலாச்சாரம் முக்கியமாக தமிழர்களின் பூர்வகுடி சாயல்களை எல்லாம் அனுபவிக்க நினைத்தால் இலங்கையை விட சிறந்த இடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அப்படி இலங்கைக்கு நீங்கள் பயணம் செய்யும் போது செய்யக்கூடிய சுவாரசியமான விஷயங்களை பற்றி தான் இன்று சொல்ல இருக்கிறோம்.
இலங்கை உணவின் முக்கியமான இனிப்பு வகையாக வத்தலப்பம்(Watalappam) இருக்கும். தேங்காய் பால், வெல்லம், முட்டை, சுத்திகரிக்கப்பட்ட மாவு, முந்திரி பருப்புகள் மற்றும் ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தேங்காய் கொழுக்கட்டை ஆகும். இலங்கையில் இதை சுவைக்க மறந்துவிடாதீர்கள்.
கொழும்பில் தெஹிவாலா-லாவினியா யில்(Dehiwala-Mount Lavinia) அமைந்துள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் ‘எங்கள் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்’ மூலம் ஒரு ஆமை குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. சீசன் காலத்தில் கடல் ஆமைகள் இங்கு வந்து முட்டையிட்டு செல்லும். முட்டை பொரிந்து கடலில் சேரும் காட்சியை மிஸ் செய்துவிடாதீர்கள்