முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

கொரோனா லாக்டவுன் காரணமாக 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த குழந்தைகள் இப்போது பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில் சற்றே சுணக்கம் காட்டலாம். பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளைத் திட்டாமல், அடிக்காமல் அன்பாகச் சொல்லி பள்ளிக்கு அனுப்புவது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

 • 115

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  1. புதிதாக அல்லது புதிய பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் அவர்களுக்குக் கிடைக்க உள்ள புதிய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றிச் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும். அதேபோல் புதிய பள்ளியில் நிறைய புதுப்புது விளையாட்டுக்கள், பாடல்கள் ஆகியவற்றைக் கற்றுத்தருவார்கள் எனச் சொல்லி பிள்ளைகளுக்குப் பள்ளியைப் பிடித்த இடமாக மாற்றலாம்.

  MORE
  GALLERIES

 • 215

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  2. பள்ளியில் கடினமான அல்லது அழுவது போன்ற சூழ்நிலைகள் வரும் போது 1 முதல் 10 வரை எண்ணுவது, மூச்சை ஆழமாக இழுத்துச் சுவாசிப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யக் குழந்தைகளைப் பழக்கப்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 315

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  3. குழந்தைகளுக்கு பிடித்தமான புதிய பேனாக்கள், பென்சில்கள் மற்றும் பிற பள்ளிப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும், வாங்கிக் கொடுக்கவும் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 415

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  4. குழந்தைகளை இந்த ஆண்டுக்கான நம்பிக்கை மற்றும் குறிக்கோள்கள் குறித்து எழுதச் சொல்லலாம். அதனை ஆண்டு இறுதியில் மதிப்பாய்வு செய்து, அதில் வெற்றி பெற்றுள்ள விஷயங்களுக்காகப் பாராட்டலாம். இது குழந்தைகளை அடுத்த ஆண்டு பள்ளிக்குச் செல்வதற்கான உற்சாகத்தைக் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 515

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  5. அழகான டிஃபின் பாக்ஸ், செம்ம ஸ்டைலான வாட்டர் பாட்டில்கள் என லேட்டஸ்ட் ட்ரெண்டில் இருக்கக்கூடிய பொருட்களைப் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கலாம்

  MORE
  GALLERIES

 • 615

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  6. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு கலர்ஃபுல்லான, சுவையான புதுவித உணவுகளை மதிய உணவுக்குக் கொடுத்து அனுப்புவதை கடைப்பிடிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 715

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  7. குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யக்கூடிய இடத்தை அவர்களுக்குப் பிடித்தது டிசைன் மற்றும் நிறங்களில் உள்ள டேபிள் மற்றும் சேர் கொண்டு ச்ர்ட் செய்யுங்கள். அது அவர்களுக்கான தனிப்பட்ட இடம் போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 815

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  8. புத்தகங்கள், பள்ளியைப் பற்றிக் கவலைப்படாமல், நல்ல மாணவராகவும் சிறந்த நண்பராகவும் மாற வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 915

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  9. வாரத்தின் நடு நாட்களில் பிள்ளைகளுக்குப் பள்ளிக்குச் செல்லவே பிடிக்காது, அப்படிப்பட்ட நாட்களில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், பிடித்த ஐஸ்கிரீம் அல்லது சாக்லெட்டை பரிசளிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1015

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  10. காலை பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பிரஞ்சு டோஸ்ட், பேன் கேக், அல்லது கலர்ஃபுல் சாண்ட்விச் போன்ற சுவையான, கவர்ச்சியான டிபனை சாப்பிடக் கொடுக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1115

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  11. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வீட்டில் திரைப்படம் பார்ப்பது, வீடியோ கேம் விளையாடு போன்ற விஷயங்களில் பெற்றோர் ஈடுபடலாம்.

  MORE
  GALLERIES

 • 1215

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  12. குழந்தைகளைப் படிக்கவும், இரவு நேரத்தில் தங்கவும் நண்பர்கள் வீட்டிற்கு அனுப்புங்கள். அதேபோல் அவர்களுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைக்கவும் ஊக்கப்படுத்துங்கள். இது பிள்ளைகளுக்குப் பள்ளியில் புதிய நண்பர்களை உருவாக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 1315

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  13. குழந்தை பள்ளியிலிருந்து திரும்பியதும், அவர்களின் நாள் எப்படி இருந்தது என்றும், இன்று அவர்கள் எதைப் புதிதாகக் கற்றுக்கொண்டார்கள் என்றும் கேட்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1415

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  14. குழந்தைகள் பள்ளி நண்பர்களுடன் இருக்கும் போது அனைவரும் வெளி இடத்திற்குக் கூட்டிச்சென்று விரும்பும் தின்பண்டங்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

  MORE
  GALLERIES

 • 1515

  குழந்தைகள் அடம் பிடிக்காமல் பள்ளிக்குச் செல்ல இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணிப்பாருங்க!

  15. குழந்தைகள் பள்ளியில் சிறப்பான நேரத்தைச் செலவிட உங்கள் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES