முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

இன்றைய சமூக ஊடக உலகில், உங்களின் லிங்க்டு இன் புரொஃபைலை நீங்கள் அப்டேட் செய்யும் தருணத்தில், உங்கள் முன்னாள் சக ஊழியர்கள் நீங்கள் புதிய வாய்ப்புகளை தேடுகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். எனவே, நீங்கள் மிகவும் நேர்மையாக இருத்தல் நல்லது.

 • 16

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  இன்றைய பணி சூழலில் பலரும் புதிய வேலையை தேடி செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வேலை பளு, குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம் ஆகியவை காரணமாக உள்ளன. எனவே, இது போன்ற மோசமான நிறுவனங்களில் இருந்து தப்பித்து புதிய நிறுவனங்களுக்கு செல்ல வேண்டுமென்றே பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், தற்போது உள்ள வேலையை விட்டு வெளியேறுவதற்கான எண்ணம் உங்கள் நல்ல பெயர் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்கிற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஒரு பயம் உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 26

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  இருப்பினும், உங்கள் ராஜினாமா கடிதத்திற்கு உங்கள் முதலாளியின் எதிர்வினை என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்கிற உண்மையை நீங்கள் புரிந்து கொண்டாலே இந்த பயம் வேண்டியதில்லை. உங்கள் பயத்தை போக்கினால் எதிர்மறையான விளைவுகளை நீங்கள் இன்னும் தவிர்க்கலாம். எனவே, ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு எந்த சிக்கலும் இல்லாமல் மாறுவதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  முதலாளியிடம் பேசுங்கள் : உங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான உங்கள் முடிவு குறித்து உங்கள் மனம் உடன்படும்போது, ​​நீங்கள் சொல்லும் முதல் நபர் உங்கள் முதலாளி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வேலையை விட்டு வெளியேறும்போது, ​​உங்கள் முதலாளிக்கு போதுமான அறிவிப்பை வழங்குவது நல்லது. மேலும் நீங்கள் நிறுவனத்தின் சீனியர் நிலைகளில் பணிபுரிகிறீர்கள் என்றால், ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடித்து கொடுங்கள். உங்கள் முதலாளி மற்றும் மேலாளருடன் நேரில் தெரிவிக்க ஒரு சந்திப்பை திட்டமிடுங்கள். உங்கள் முதலாளிக்கு தெரியாமல் அந்த வேலையை விட்டுவிட்டு நீங்கள் கிளம்பினாள், அது உங்கள் சக ஊழியர்களிடையே பரவி கடினமான நிலைமையை உண்டாக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  வெளிப்படையாக இருங்கள் : எப்போதும் வேலை இடத்தில் வெளிப்படையாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் இந்த போக்கு உங்களுக்கான சூழ்நிலைகளை சிக்கலாக்க மாற்றி விடும். உங்கள் மதிப்பையும், நல்ல நிலையையும் பாதுகாக்க உங்கள் சொற்களையும் நோக்கங்களையும் வெளிப்படை தன்மையுடன் இருத்தல் அவசியம். இன்றைய சமூக ஊடக உலகில், உங்களின் லிங்க்டு இன் புரொஃபைலை நீங்கள் அப்டேட் செய்யும் தருணத்தில், உங்கள் முன்னாள் சக ஊழியர்கள் நீங்கள் புதிய வாய்ப்புகளை தேடுகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். எனவே, நீங்கள் மிகவும் நேர்மையாக இருத்தல் நல்லது.

  MORE
  GALLERIES

 • 56

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள் : ஒவ்வொரு பயணமும் உங்களை மாற்றுகிறது, மேலும் ஒவ்வொரு அனுபவமும் பல நல்ல விஷயங்களை கற்று தரும். மேலும், உங்களை நல்ல நபராக வடிவமைக்கிறது. எனவே, உங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க சென்றாலும், உங்கள் நன்றி உணர்வை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் உங்கள் மீது என்றுமே நல்ல அபிப்ராயம் இருக்கும். மேலும், நீங்கள் பகிர்ந்த அனைத்து இனிமையான மதிய உணவு நேர நினைவுகள் பற்றியும், நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் குறித்தும் அவரிடம் பேசலாம். இது உங்கள் மீதுள்ள மதிப்பை மேலும் கூட்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  வேலையை ரிசைன் செய்றீங்களா..? உங்கள் பாஸிடம் பக்குவமாக சொல்ல டிப்ஸ்..!

  மென்மையான மாற்றங்கள் : உங்கள் வேலை மாற்றம் என்பது தற்போதைய நிறுவனத்திற்குள் அதிக இடையூறு ஏற்படாதுபடி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இதற்கு, உங்கள் அணியின் வேலை சுமையை குறைக்க முடிந்தவரை உதவுங்கள். உங்கள் வேலையின் விரிவான ஆவணங்களை பராமரிக்கவும், இதன்மூலம் உங்கள் மாற்று என்பது அவர்கள் திறம்பட செயல்படத் தேவையான தகவல்களை எளிதாக அணுக முடியும். இது உங்கள் குழுவினருக்கு மிக உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES