நீங்கள் மெனெக்கெட்டு செய்த பிரசெண்டேஷன் உங்கள் பாஸுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையா? நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்கள் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லையா? உங்கள் துணையுடன் ஆன சின்ன சண்டை பெரிதாகி எதிர் பாரத விதமாக பிரேக்அப்பில் முடியும் கட்டத்திற்கு சென்று விட்டதா? இது போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் கடந்து தான் வந்து இருக்கிறோம். இது போன்ற பல விஷயங்கள் நம் அனைவரின் வாழ்க்கையிலும் உண்டு.
ஆனால், இது குறித்து மனம் நொந்து தோல்வி அடைந்து விட்டோம் என்று அதனை விட்டு விடக் கூடாது. இதனை கண்டிப்பாக உங்களால் சமாளித்து வெளி வர முடியும். இன்னும் வாழ்க்கையில் நீங்கள் எதிர் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. இது போன்ற தருணங்களில் மனம் நொந்து போவது சகஜம் தான் என்றாலும், அதில் இருந்து நீங்கள் மீண்டு ஜெயிப்பது தான் முக்கியம். வாருங்கள், அது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.
ஒரு கட்டத்தில் நாம் என்ன தான் முயற்சி செய்தும் தோல்வியைத் தழுவும் போது, நம் மொத்த தன்னம்பிக்கையும் இழந்தது போன்ற உணர்வு வரும். நம் மீது நமக்கே கோபமாக வெறுப்பாக இருக்கும். இது வேண்டாம் என்று விட்டுவிடவும் தோணும். ஆனால், இதனை உங்களால் சமாளித்து வெற்றி பெற முடியும். மனம் தளராதீர்கள். அதற்கான ஒரு சில டிப்ஸ் இதோ!!
உங்கள் இலக்கு என்ன என்பதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள் : நீங்கள் உங்களுக்குளேயே இந்தக் கேள்வியை முதலில் கேட்டுப் பாருங்கள், "இது உண்மையில் ஒரு நியாயமான இலக்கு தானா?". உதாரணத்திற்கு, புது வருடம் என்றாலே, பலர் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று தான் ரெசல்யூஷன் எடுப்பார்கள். ஆனால், குறுகிய காலத்தில் நம்மால் அதிக எடையை இழக்க முடியாது. அதனால், அது ஒரு நியாமான இலக்கு என்று நம்மால் சொல்ல இயலாது.
சற்று பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள் : உங்கள் இலக்கு அல்லது குறித்து நீங்கள் செய்த முயற்சிகள் என அனைத்தையும் சற்று தள்ளி வைத்துவிட்டு, அதில் இருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குறைவாக உணரும் போது, அதாவது மனம் சோர்த்து இருக்கும் போது, உங்கள் இலக்கை அடைவதற்கான மனப்பக்குவம் அப்போது உங்களுக்கு இருக்காது. அதனால், பிரேக் எடுத்து மனதை திடப்படுத்துவது அவசியம்.
தோல்விக்கு நீங்கள் தான் காரணம் என்று உங்கள் மேல் பழி போடுவதை நிறுத்துங்கள் : உங்கள் தோல்விக்கு நீங்கள் தான் காரணம் என்று நீங்களே உங்கள் மேல் பழி போட்டுக் கொள்வது இயல்பான ஒன்று தான். அது மட்டும் அல்ல, இது குறித்து உங்கள் மேல் கோபபப்பட்டு உங்களையே நீங்கள் திட்டிக் கொள்வீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், இது உங்களை மேலும் கீழே தான் தள்ளுமே தவிர, உங்கள் இலக்கை அடைய இது ஒரு போதும் உதவாது.
கவனத்தை சிதறச் செய்யுங்கள் : கவனத்தை சிதறச் செய்தல் என்பது எப்பொழுதும் தவறானது அல்ல.தேவையான போது நம் கவனத்தை வேறு விஷயங்களில் செலுத்துவதும் நல்லது. அதனால், உங்களைப் பார்த்துக் கொள்வது போன்ற வேறு விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். எந்த வித அஜெண்டாவும் இல்லாமல், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரம் செலவழித்து மகிழுங்கள். விடுமுறை எடுத்து எங்காவது போய்விட்டு கூட வரலாம். உங்கள் மனம் மாறும்.
தியானம் செய்யுங்கள் : நீங்கள் உங்களுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு நல்லது. அதுவும் நீங்கள் நிம்மதியாக இருக்க செலவழிக்கும் நேரத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளை கண்டிப்பாக மிகைப்படுத்த முடியாது. எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில், தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது. உங்கள் மனம் அலைபாய்ந்தாலும், பரவாயில்லை. உங்கள் மனதுக்கு நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்.
தியானம் செய்யுங்கள் : நீங்கள் உங்களுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு நல்லது. அதுவும் நீங்கள் நிம்மதியாக இருக்க செலவழிக்கும் நேரத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளை கண்டிப்பாக மிகைப்படுத்த முடியாது. எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில், தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது. உங்கள் மனம் அலைபாய்ந்தாலும், பரவாயில்லை. உங்கள் மனதுக்கு நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்.
நன்றி உணர்வுடன் இருந்து அதனை வெளிப்படுத்துங்கள் : நன்றி செலுத்துவது ஒரு நல்ல விஷயம் மட்டும் அல்ல, இது நம் வாழ்க்கையின் சமநிலைக்கு உதவும். எந்த ஒரு சின்ன விஷயம் நன்றாக நடந்தாலும், அதற்கு நீங்கள் நன்றி தெரிவியுங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கண்டிப்பாக நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்வில் தேடி வரும். வெற்றி கிட்டும்.