நாம் நம்மை உலகிற்கு எப்படி காட்டிக் கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கும் பெரும் பங்கு நமது ஆடைகளுக்கு உள்ளன. அதைத் தான் ஆள் பாதி ஆடை பாதி என்ற வாசகம் கூறுகிறது. எனவே தான், நாம் வேலைக்கு மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது துவைத்து சலவை(Iron) செய்த ஆடைகளை நன்கு உடுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
தண்ணீரைப் பயன்படுத்துங்கள்: சில ஆடைகள், குறிப்பாக பருத்தி ஆடைகள், துவைத்த பிறகு மிக அதிகமான சுருக்கங்களுடன் இருக்கும். எனவே, அவற்றை இஸ்திரிபோட நிறைய நேரம் எடுக்கும். மேலும், பலமுறை அழுத்தினாலும் சுருக்கங்கள் சரியாகப் போகாது. இதற்கு நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்தினால் எளிதாக இஸ்திரி போடலாம். ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பியோ, பருத்தி கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து அதன்மூலம் தெளித்தோ ஆடைகளை இஸ்திரி போட்டால் சுருக்கமும் முற்றிலும் போய்விடும்.
ஹேர் ட்ரையரை பயன்படுத்துங்கள் : பல சமயங்களில் இஸ்திரி போட்ட துணிகளை அலமாரி அல்லது பீரோக்களில் வைத்து பின்னர் அவற்றை எடுக்கும் போது அதில் லேசான சுருக்கங்கள் இருக்கும். இந்த ஆடைகளை அணிந்தால் நன்றாக இருக்காது. இந்த சுருக்கங்களை நீக்க நீங்கள் ஒரு முடி உலர்த்தும் ஹேர் டிரையர்களை பயன்படுத்தலாம். இந்த துணிகளில் தண்ணீர் தெளித்து, பின்னர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தவும். இதன் மூலம் ஆடைகள் சில நொடிகளில் சுருக்கம் இல்லாமல் மாறும்.
சில சமயங்களில் துணிகளை இஸ்திரி செய்வதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். மேலும், சரியான வெப்பத்தில் ஆடைகளை இஸ்திரி செய்யாமல் விட்டால் அது சுருக்கங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே முதலில் லேசான அடைகள் மற்றும் அடர்த்தியான ஆடைகள் என தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சாதாரண வெப்பத்தில் லேசான துணிகளை அயர்ன் செய்யவும். பின்னர் அடுத்த வெப்ப நிலையில் பருத்தி ஆடைகள் தொடர்ந்து அடர்த்தியான ஆடைகளை இஸ்திரி போடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் அழுத்தி அழுத்தி இஸ்திரி போட தேவை வராது.
துணிகளைத் துவைத்த பிறகு, அவை சுருங்காமல் இருக்க ஹேங்கர்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக கனமான ஆடைகள் மற்றும் வாஷிங் மெஷினில் சட்டை மற்றும் பேண்ட்களை துவைத்த பிறகு, அவற்றை உலர வைக்க ஹேங்கர்களில் தொங்க விடுங்கள். இதன் காரணமாக, ஆடைகளில் அதிக சுருக்கங்கள் இருக்காது மற்றும் அயர்னிங் செய்வதில் அதிக நேரமும் முயற்சியும் இருக்காது.
சில நேரங்களில் ஜரிகை ஆடைகளை இஸ்திரி போட நிறைய நேரம் எடுக்கும். எனவே, இந்த ஆடைகளை இஸ்திரி போடுவதற்கு, ஒரு செய்தித்தாளை எடுத்து அதன் நடுவில் துணியை வைக்கவும். இதற்குப் பிறகு, நடுத்தரமான வெப்பத்தில் துணியை சலவை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம், சரிகை துணிகளை எளிய முறையில் இஸ்திரி போட முடியும். (பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் தகவல்களும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. news18 ஊடகம் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)