முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

பெரும்பாலான நேரங்களில் எதிர்பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். எதிர்பாராத நேரத்தில் நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கலாம். எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் பக்குவமே அவசியம்.

 • 18

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வந்தாலே மாணவர்களுக்கு மனப்பதட்டம் வந்துவிடும். இது மனித இயல்பு என்றாலும் அந்த மதிப்பெண்கள் தரும் பதிலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய மன உறுதி சோதிக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் எதிர்பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். எதிர்பாராத நேரத்தில் நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கலாம். எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் பக்குவமே அவசியம். அதேபோல் மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்கும் விஷயம் கிடையாது. அது அடுத்த வெற்றிக்கான நகர்வு. எனவே நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை அல்லது தோல்வியை சந்தித்தீர்கள் எனில் பின்வரும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

  MORE
  GALLERIES

 • 28

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  குறைந்த மதிப்பெண்ணுக்கான காரணத்தை ஆராயுங்கள் : குறைந்த மதிப்பெண் அல்லது தோல்வியை பார்த்து மன அழுத்தம், மனக்கவலை அடைவதைக் காட்டிலும் அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். எதனால் குறைந்தது..? எங்கு தவறு செய்தீர்கள் என்பதை கண்டறியுங்கள். நீங்கள் செய்த தவறு நேரத்தை சரியாக கையாளாமல் போயிருக்கலாம், கடினமாக கேள்வியை தேர்வு செய்து எழுதியிருக்கலாம், பயத்தில் மறந்திருக்கலாம் , முக்கிய கேள்வி என தெரிந்தே சரியாமல் ரிவிஷன் செய்யாமல் விட்டிருக்கலாம். இப்படி எது உங்கள் தவறு என்பதை கண்டறிந்து சரி செய்யுங்கள். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 38

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  உங்கள் அணுகுமுறையை மாற்றவும் : நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை எனில் உடனே மனமுடைந்து போகாமல் அடுத்த தேர்வில் தவறுகளை சரி செய்து நன்கு படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் தோல்வியிலிருந்துதான் வெற்றிக்கான பாதையை தேர்வு செய்ய முடியும். எனவே இதை அனுபவமாக எண்ணி அதிலிருக்கும் தவறுகளை சரி செய்துகொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  அடுத்த தேர்வில் பாசிடிவாக இருங்கள் : தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றதை எண்ணி கவலையோடு இருந்தால் மனச்சோர்வுக்கு செல்லக்கூடும். பின் உங்களால் அடுத்தடுத்து நகர்ந்து செல்வதில் தடுமாற்றம் இருக்கும். எனவே போனது போகட்டும் இன்று எனக்கான கெட்ட நாள்.. ஆனால் மீண்டும் இதுபோன்றதொறு நாளை சந்திக்கவே கூடாது எஅன் பாசிட்டிவாக எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே நெகடிவான சிந்தனைகளை தவிர்க்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 58

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  மதிப்பெண் பற்றிய கவலையை விடுங்கள் : உங்களுக்குள் இருக்கும் எண்ண ஓட்டங்களை மற்றவர்களுடன் பகிருங்கள். உங்கள் நண்பர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள். நீங்கள் இதை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக பேசுவது மனதை நிம்மதியடையச் செய்யும். மாறாக மனதிற்குள்ளேயே போட்டு வைத்துக்கொள்வது மேலும் உங்களை துக்கத்தில் ஆழ்த்தும். அதோடு நெகடிவான எண்ணங்கள் உங்களை சூழ்ந்துகொள்ளும். எனவே எதுவாயினும் அதை வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 68

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  அடுத்த தேர்வுக்கு வித்தியாசமான திட்டங்கள் : இந்த முறை நீங்கள் வகுத்த திட்டங்களால் சரியான மதிப்பெண் எடுக்கமுடியவில்லை எனில் புதிதாக திட்டங்களை வகுப்பது நல்லது. இதற்கு நீங்கள் ஆசிரியரின் ஆலோசனையையும் பெறலாம். +12 தேர்வில் குறைந்த மதிப்பெண் எனில் கல்லூரி சென்ற பின் அங்கு எப்படி நன்கு மதிப்பெண் எடுக்கலாம் என திட்டமிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  உங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுங்கள் : சில நேரங்களில் தேர்வு காரணமாக மனப்பதட்டம் , மன அழுத்தம் காரணமாகவும் உங்கள் மதிப்பெண் குறைந்திருக்கலாம். நீங்கள் நல்ல முறையில் படித்திருக்கிறீர்கள் எனில் தானாக உங்களுக்கு நம்பிக்கை கூடும். கடைசி நேர ரிவிஷன்களை தவிருங்கள். நேரத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள். வீட்டிலேயே முந்தைய ஆண்டு தேர்வு பரிசைகளை டெஸ்ட் எழுதி பாருங்கள். இதுபோன்ற பயிற்சிகள் தானாக உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களுடைய பங்களிப்பையும் சிறப்பாக தர முடியும்.

  MORE
  GALLERIES

 • 88

  பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா..? கவலையை விடுங்க... அடுத்து இதை பண்ணுங்க..!

  நினைவுகொள்ளுங்கள்.. தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவுக்கான இலக்கு அல்ல. அதனால் நீங்கள் திறமையில் குறைந்தவர் என்றோ, வெற்றியை அடைவதற்கு தகுதியில்லாதவர் என்றோ நினைக்க வேண்டாம். தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண் என்பது வெற்றிக்கான பாதையில் சிறு சருக்கல் மட்டுமே. எனவே இதிலிருந்து மீண்டு வர நீங்கள் மன உறுதியோடு இருக்க வேண்டும். அடுத்த காரியத்தை நோக்கி நகர வேண்டும்.

  MORE
  GALLERIES