புதிதாக ஒரு அலுவலத்திற்கு வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், அதில் எல்லா ஊழியர்களும் அன்பானவர்களும், புதிதாக வந்தவர்களிடம் நட்பு பாராட்டுபவராகவும் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அனைத்து பணியிடத்திலும் எப்போதும் ஒரு மோசமான நபர் இருக்க வாய்ப்புள்ளது. எப்போதும் உங்களை சிடுசிடுப்புடனும், கடுகடுப்புடனும் அணுகக்கூடிய சக ஊழியர் ஒருவர் எப்போதும் இருக்க அலுவலகத்தில் இருக்க வாய்ப்புள்ளது.
உங்களுக்கு அவர்களுடைய குணநலன்கள் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுடன் தான் வேலை செய்தாக வேண்டும் எனும் பட்சத்தில், அவர்களை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் தனது முரட்டு சுபாவத்தால் உங்களை நொந்து போக வைக்கும் சக ஊழியரை சமாளிப்பது எப்படி என்ற சில டிப்ஸ்களை கீழே பகிர்ந்துள்ளோம். படித்து புரிந்து கொள்ளுங்கள்.
1. சக ஊழியரும் அதையே உணர்கிறாரா? சில சமயங்களில் நம்முடைய அதிகப்படியான எண்ண ஓட்டம், குறிப்பிட்ட ஊழியர் நம்மிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போல் தோன்றவைக்கலாம். எனவே உங்களிடம் நன்றாக பழகக்கூடிய சக ஊழியரிடம் இதுபற்றி மனம் விட்டு பேசுங்கள். ஏனென்றால் நாம் பக்கத்தில் இருந்து யோசிக்கும் போது அனைத்தும் நல்லதாகவே தெரியும். எனவே தான் குறிப்பிட்ட ஊழியர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போல் உங்களுக்கு மட்டும் தான் தெரிகிறதா? அல்லது உங்களுடைய சக ஊழியரும் உங்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் மாற்றத்தை உணர்கிறாரா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
3. குறைவாக பேசுங்கள்: சக ஊழியர் எப்போதும் உங்களிடம் சகஜமாக பேசமால், சிடுசிடுக்கும் தொனியிலேயே பேசுகிறார் என்றால், அப்படிப்பட்டவரிடம் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சக ஊழியரை நீங்கள் எப்போதும் தவிர்க்க முடியாது, ஆனால் உங்களுக்கும் அவருக்குமான தொடர்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
4. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கள் : சக ஊழியர் அல்லது உயர் அதிகாரி உங்களை திட்டுவதும், விமர்சிப்பதும், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் உங்களுடைய வளர்ச்சிக்கானது என நினைத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர் உங்களிடம் ரூடாக நடந்து கொள்ளும் சமயத்தை வேடிக்கையானதாக மாற்றுங்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், சிறிய புன்னகையுடன் கடந்து செல்லலாம்.
5. மேனேஜரிடம் பேசுங்கள்: சக ஊழியர் ரூடாக நடந்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பற்றி உங்கள் மேனேஜரிடம் பேச தயங்காதீர்கள். உங்கள் டீம் லிடர், மேற்பார்வையாளர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களிடம் சூழ்நிலையை விளக்கிக் கூற முயற்சி செய்யுங்கள். எடுத்த எடுப்பில் குறிப்பிட்ட நபர் மீது புகார் பட்டியலை வாசிக்காமல், முதலில் உங்களது மனக்குறையை பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்னரும் நிலைமை மோசமாகும் பட்சத்தில் அந்த நபர் பற்றி பெயர், பதவி போன்ற அடையாளங்களை வெளிப்படுத்தலாம்.