டைம் மேனேஜ்மென்ட் ஏன் முக்கியம் என்றால், ஒருவர் தனது நேரத்தை திறம்பட நிர்வகிப்பது குறைந்த நேரத்தில் அவர் அதிக வேலைகளைச் செய்ய உதவுவதோடு மன அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும். முதலில் மோசமான நேர மேலாண்மை (Time management) ஒருவரின் மன ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை பார்த்து விடலாம்.
நீங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் அல்லது விஷயங்கள் அதிகமாக இருக்கும் போது அதை பொறுமையாக செய்து முடிக்க போதுமான நேரம் இல்லை என்றால், அதன் காரணமாக நீங்கள் அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அனுபவிக்க நேரிடலாம். இது உங்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். மேலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதை கடினமாக்கும்.
நீண்டகாலமாக நீடிக்கும் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைபளு காரணமாக ஏற்படும் உணர்ச்சி பர்ன்அவுட் எனப்படுகிறது. இந்த நிலை உடல் மற்றும் மன சோர்வு நிலையாகும். உங்கள் நேரத்தை நீங்கள் திறம்பட நிர்வகிக்க இயலாத போது,நீங்கள் சோர்வுக்கு ஆளாகி அதன் காரணமாக நம்பிக்கையின்மை மற்றும் உந்துதல் இல்லாமை போன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்படலாம்.
பயனுள்ள டைம் மேனேஜ்மென்ட்டிற்கான மிக முக்கிய டிப்ஸ்களில் ஒன்று உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும். இதற்கு ஒரு நாள் அல்லது 1 வாரத்திற்கு நீங்கள் செய்து முடிக்க வேண்டிய பணிகளின் பட்டியலை உருவாக்கவும். பின் எந்த வேலையே முதலில் முடிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில் பணிகளை வரிசைப்படுத்தவும். இதனை தொடர்ந்து மிகவும் முக்கியமான வேலைகளை முதலில் முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் மொபைல் அல்லது டிவைஸில் இருக்கும் காலண்டர் அல்லது ஷெட்யூலிங் டூலை பயன்படுத்தவும், இவை உங்களுக்கு முக்கிய வேலைகளை செய்து முடிப்பதில் உதவிக்காக இருக்கும். அப்பாயின்ட்மென்ட்ஸ், மீட்டிங்ஸ் மற்றும் வேலைகளுக்கான காலக்கெடுவை திட்டமிட காலண்டர் டூலை பயன்படுத்தவும். இது போன்ற டூல்கள் உங்கள் நேரத்தை மிக திறமையாக நிர்வகிக்க உதவும்.
டைம் ப்ளாகிங் என்பது ஒரு பயனுள்ள டைம் மேனேஜ்மென்ட் உத்தியாகும். இந்த மெத்தட் உங்கள் நாளின் நேரத்தைத் Blocks-களாக பிரித்து ஒவ்வொரு Block-ற்கும் குறிப்பிட்ட டாஸ்க்களை ஒதுக்கி அவற்றை செய்வதை உள்ளடக்குகிறது. இந்த முறை உங்கள் நேரத்தை மிக திறமையாக நிர்வகிக்க மற்றும் ஒவ்வொரு பணிக்கும் போதுமான நேரத்தை செலவிடுவதை உறுதி செய்கிறது. Time-blocking-ஐ தேர்வு செய்யும் போது உங்கள் ஆற்றல் அளவுகள் குறைவாக இருக்கும் நேரங்களில் குறைவான முக்கியத்துவம் கொண்ட பணிகளை செய்ய திட்டமிடவும்.
தேவையற்ற நேரத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது உங்கள் நேரத்தை வீணாக்குவதோடு உங்களது உற்பத்தி திறனையும் வெகுவாக பாதிக்கும். வேலை நேரத்தில் கவனசிதறல்களை ஏற்படுத்தும் செயல்களான மொபைலை பயன்படுத்துவது, இமெயில் செக் செய்வது, சோஷியல் மீடியாக்களில் நேரம் செலவிடுவது உள்ளிட்ட பல செயல்களை தவிர்ப்பதன் மூலம் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்ய முடியும்.
உங்களது உற்பத்தித்திறனை அதிகரிக்க மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுவதை தவிர்க்கவும் சீரான இடைவெளியில் பிரேக் எடுப்பது முக்கியம். உடலை ஸ்ட்ரெச் செய்து கொள்வது, சிலநிமிட வாக்கிங் அல்லது ஓய்வெடுக்கவும் சிறிய பிரேக் அவ்வப்போது எடுப்பது முக்கியம். இந்த பழக்கம் மேம்படும் வேலை செய்ய துவங்கும் போது உங்கள் உடல் தன்னை தானே ரீசார்ஜ் செய்து புத்துணர்ச்சியுடன் இயங்க உதவும். உங்கள் உற்பத்தித்திறன் அதிகரிக்க, நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க எப்போதுமே பயனுள்ள நேர மேலாண்மை முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.