முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

Tooth Care : பல் சொத்தையை எதிர்த்துப் போராடுவதில் ஃப்ளூரைடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஃப்ளூரைடு என்பது பெரும்பாலான டூத்பேஸ்ட்களில் சேர்க்கப்படும் ஒரு கனிமமாகும், இது ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது.

  • 15

    நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

    பொதுவாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது மிகவும் கவனமாக பார்த்து பார்த்து வாங்குவோம். அந்த பொருட்களில் எதுவும் பாதிப்பு வந்துவிட கூடாது என்பதற்காக அதை தேர்வு செய்யும்போது மிக ஜாக்கிரதையாக இருப்போம். வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கே இப்படி என்றால் நாம் அன்றாடம் நமது தேவைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், பெரும்பாலும் நாம் அவ்வாறு செய்வதில்லை. மாறாக அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். காலையில் நாம் பயன்படுத்த கூடிய டூத்பேஸ்ட் முதல் இந்த பிரச்சனை தொடங்குகிறது. எனவே இந்த பதிவில் நீங்கள் டூத்பேஸ்ட் வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 25

    நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

    ஃப்ளூரைடு : பல் சொத்தையை எதிர்த்துப் போராடுவதில் ஃப்ளூரைடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஃப்ளூரைடு என்பது பெரும்பாலான டூத்பேஸ்ட்களில் சேர்க்கப்படும் ஒரு கனிமமாகும், இது ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது. முக்கியமாக பிளேக்கின் அமிலத்தை உருவாக்கும் திறனைக் குறைக்கிறது. மேலும் இது பல் சிதைவைத் தடுக்கிறது. எனவே டூத்பேஸ்ட்டை வாங்கும்போது அதில் ஃப்ளூரைடு உள்ளதா என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 35

    நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

    சிராய்ப்புகள் : இந்த மூலப்பொருள் டூத்பேஸ்ட்டின் முக்கிய செயலில் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பற்களில் உள்ள குப்பைகள் மற்றும் கறைகளை அகற்ற சிராய்ப்புகள் உதவுகின்றன. பொதுவாக கால்சியம் கார்பனேட், டிஹைடிரேட் சிலிக்கா ஜெல்கள் மற்றும் ஹைடிரேட் அலுமினியம் ஆக்சைடுகள் ஆகியவை இவற்றில் அடங்கும். உங்கள் ஈறுகளுக்கு தீங்கு விளைவிக்காமல், பற்களின் மேற்பரப்பை மெதுவாக துடைப்பதே சிராய்ப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். பற்களை வெண்மையாக்கும் டூத்பேஸ்ட்களில் அதிக சிராய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

    ஃபிளேவர்ஸ் : ஃவுளூரைடு மற்றும் சிராய்ப்பு பொருட்கள் பற்களை சுத்தம் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் உதவும். ஆனால் அவை பல் துலக்குவதற்கு ஏற்ற சுவை இல்லாமல் இருக்கலாம். எனவே, இவற்றில் சுவை இருக்க வேண்டும் என்பதற்காக ஃபிளேவர்ஸ் சேர்க்கப்படுகின்றன. டூத்பேஸ்ட்டின் சுவைகள் சாக்கரின் அல்லது சர்பிடால் போன்ற இனிப்புப் பொருட்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும், இந்த வகை டூத்பேஸ்ட்களில் சர்க்கரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினம் இவை இறுதியில் பல் சிதைவை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 55

    நீங்கள் சரியான டூத்பேஸ்டைதான் தேர்வு செய்கிறீர்களா..? சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..!

    சென்சிட்டிவ் : சிலருக்கு மிகவும் சென்சிட்டிவ் தன்மையுள்ள பற்கள் இருக்க கூடும். எனவே அவர்களுக்கு என்று சில சென்சிட்டிவ் வகை டூத்பேஸ்ட்கள் உள்ளன. பொட்டாசியம் நைட்ரேட், ஸ்டானஸ் ஃவுளூரைடு மற்றும் ஸ்ட்ரோண்டியம் குளோரைடு ஆகிய மூலப்பொருட்கள் உள்ள டூத்பேஸ்ட் சென்சிட்டிவ் பற்களை கொண்டவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த மூலப்பொருட்கள் உங்கள் பற்களில் உள்ள நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகின்றன. மேலும் சூடான, குளிர்ந்த அல்லது இனிப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டாலும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பை இவை குறைக்கின்றன.மேற்சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் பற்களுக்கு ஏற்ற சிறந்த டூத்பேஸ்ட்டை வாங்குவது நல்லது.

    MORE
    GALLERIES