ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

இன்றைக்கு தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் தொழில்முனைவோருக்குக் கடன்கள் பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றனர்.

 • 18

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடும்ப பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதற்கு அயராது உழைக்கத் தொடங்கிவிட்டனர். குடும்பத்திற்குத் தேவையான நிலையான வருமானம், குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு என அனைத்திலும் பெண்களின் வருமானம் உதவியாக உள்ளது. இதற்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல திட்டங்கள், முறையான சேமிப்புக் கணக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு நிதி சேர்க்கைக்கான அணுகலைப் பெற உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 28

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS)-5 (2019-21) படி, இந்தியாவில் நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 81 சதவீத பெண்களும், நாட்டின் கிராமப்புறங்களில் 77.4 சதவீத பெண்களும் தங்களுக்கென்று தனியாக வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் NFHS-4 (2015-16) இன் படி 53 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியா முழுவதும் 78.6 சதவீத பெண்கள் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 38

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  இத்தகைய முன்முயற்சிகள் பெண்கள் தங்கள் நிதியை சுதந்திரமாக நிர்வகிக்கவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அதிகக் கடனைத் தடுக்கவும் உதவுகின்றன. இருந்தப் போதும் பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை உங்களது வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்? இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 48

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் : நிதி திட்டமிடல் : பெண்கள் எப்போதும் நிதி சுதந்திரமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட யாரையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்களின் நிதி திட்டமிடலைக் கவனமாக கையாள வேண்டாம். குறிப்பாக உங்களது பணத்தை எதில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள்? என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பெண்களுக்காகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களுக்காகவே பல சேமிப்புத்திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே உங்களுக்கு எது சிறந்தாக தெரிகிறேதோ? அதில் முதலீடு செய்யவும். இது உங்களுக்கு மட்டுமில்லை உங்களை நம்பியுள்ள உங்களது வாரிசுகளுக்கும் பாதுகாப்பானதாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 58

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  அணுகுமுறையில் கவனம் தேவை : பொதுவாக பெரும்பாலான வீட்டில் இருக்கும் பெண்கள், மற்றவர்கள் செய்யும் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு முதலீடு செய்துவிடுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒர் அணுகுமுறையாகும். நிதி இலக்குகள், வாழ்க்கை நிலை மற்றும் உங்களின் தேவைகளுக்கு ஏற்ப முதலீட்டு திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். மேலும் முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனைப் பெறுவது அவசியமான ஒன்று.

  MORE
  GALLERIES

 • 68

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  முறையான கடன் அணுகுமுறை : இன்றைக்கு தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் தொழில்முனைவோருக்குக் கடன்கள் பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றனர். எனவே வட்டி விகிதம் எவ்வளவு? என்பதையும் நீங்கள் முதலில் கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் நுண் நிதி நிறுவனங்கள் (MFIகள்) பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள வளரும் பெண் தொழில் முனைவோரை அவர்களின் வணிகத் திறன்களை ஆதரிப்பதன் மூலமும், நிதி திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலமும் அவர்களின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த ஊக்குவிக்கின்றன. இதனையடுத்து ஃப்யூஷன் மைக்ரோ ஃபைனான்ஸ், ஒரு NBFC-MFI ஆனது நாடு முழுவதும் சமூக மற்றும் நிதி ரீதியாக பின்தங்கிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த 3.2 மில்லியன் பெண்களை இதுவரை சென்றடைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  பெண்களுக்கு சமமான பொருளாதார வாய்ப்பு வழங்கல் : பெண் ஊழியர்களுக்கான பணிச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் பெண்கள் சமமான வணிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 88

  பெண்களே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டுமா..? உங்களுக்கான டாப் 5 டிப்ஸ்..!

  நிதி நிறுவனங்களைக் கவனமாக தேர்வு செய்தல் : இதோடு பெண்கள் மேற்கொள்ளும் முதலீடுகளில் நஷ்டத்தை சந்திக்காமலோ அல்லது அதிக வட்டி செலுத்தாமலோ கடன்களை எடுப்பதற்கும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக நம்பகமான நிதி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES