நான்காவது இடத்தில இருப்பது தைவான் நாட்டில் உள்ள காவ்சியங் நகரம். காவ்சியங் நகரத்தில் உள்ள காற்றில் PM 2.5 பதிவு தற்போது WHO வருடாந்திர காற்றின் தர வழிகாட்டி மதிப்பை விட 5.4 மடங்கு அதிகமாக உள்ளது என்று பட்டியல் குறிப்பிட்டுள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து தான் அதிகப்படியான மாசு வெளியேறுகிறது.
தென்னாப்பிரிக்கா நாடுகள் எல்லாம் மற்ற உலக நாடுகளுக்கு இடையாக தங்களை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்ற போராட்டத்தில் இயங்கி வருகிறது. அந்த வகையில் கானா நாட்டில் உள்ள அக்ரா அதிகப்படியான தொழிற்சாலைகளின் தயக்கமாக விளங்குகிறது. WHO காற்றின் தர வரம்பை விட 5.2 மடங்கு அதிக PM செறிவை பெற்று விளங்குகிறது.