உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வேக்ஸிங் மற்றும் த்ரெட்டிங் பயன்படுகிறது. கை, கால் உள்ளிட்ட உடலின் எந்த பகுதியில் இதனை செய்தாலும் வலி அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம். அதுவே முகம் போன்ற மெல்லிய மற்றும் உணர்வுத்திறன் அதிகம் கொண்ட சருமத்திற்கு வேக்ஸிங் அல்லது த்ரெட்டிங் செய்யும் போது, முகப்பரு, எரிச்சல், சருமம் சிவந்து போவது, அலர்ஜி போன்ற தேவையற்ற பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
வேக்ஸிங் செய்யும் முன் : முகத்தில் உள்ள எக்ஸ்ட்ரா ரோமத்தை அகற்ற வேக்ஸிங் செய்யும் முன்பு உங்களுடைய முகத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முகத்தில் எந்தவிதமான லோஷன்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் பூசப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் முகத்திற்கு ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டரை பயன்படுத்துவது இறந்த செல்களை நீக்க உதவும்.
சரியான வேக்ஸிங் தேர்வு : வேக்ஸிங் செய்து கொள்ளும் முன்பு உங்களுடைய சருமம் எந்தவகையைச் சார்ந்தது என்பதை சரும பராமரிப்பு நிபுணர் அல்லது அனுபவமிக்க அழகு கலை நிபுணர் உதவியுடன் பரிசோதித்து கொள்ளுங்கள். லேசான வெக்சை உடலின் பிற பாகத்தில் பயன்படுத்தி ஏதாவது அலர்ஜி ஏற்படுகிறதா? என சோதித்து பார்க்க வேண்டும். மேலும் உங்களுடைய சருமம் உணர்திறன் அதிகம் கொண்டதாக இருந்தால் நிச்சயம் செமி சாலிடான கோல்டு வேக்ஸிங்கை தேர்வு செய்வது நல்லது.
சுகர் ஸ்க்ரப் : வேக்ஸிங்கிற்கு பிறகு சுகர் ஸ்க்ரப் பயன்படுத்தலாம், இது சருமத்தில் வர உள்ள முகப்பருக்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். கடைகளிலேயே ஏராளமான சுகர் ஸ்க்ரப்கள் வகைகள் கிடைக்கின்றன, அதில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் அல்லது அரை கப் சர்க்கரை உடன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை கலந்து வீட்டிலேயே எளிமையான சுகர் ஸ்க்ரப்பை தயாரித்துக்கொள்ளலாம்.