புத்தாண்டு (New Year 2021) என்றாலே உலக மக்கள் அனைவரூக்கும் மகிழ்ச்சியான தருணம் தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி இரவு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக புத்தாண்டை பொது இடங்களில் விமர்சையாக கொண்டாட முடியாது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரை பறித்துள்ளது.
சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. வேலையிழப்பு போன்ற பல்வேறு பொருளாதார சிக்கல்களை மக்கள் இன்னும் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்களில் கொண்டாட்டங்களும் விருந்துகளும் பெரிய அளவில் நடைபெறும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு எதுவும் நடக்கப்போவதில்லை. இருப்பினும் புத்தாண்டு வருகையையொட்டி, அடுத்த சில மாதங்களில் உலகம் மீண்டும் இயல்புநிலைக்கு வர வேண்டும் என்று மக்கள் பலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
பல நாடுகளில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படுவதால், விரைவில் இயல்புநிலைக்கு திரும்புவோம் என நம்பிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் கடந்த 8 மாதங்களை வீட்டிலேயே நேரத்தை கழித்ததால் ‘விடுமுறைகள்’ என்ற சொல் 2020ம் ஆண்டில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகையை கூட மக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாடினர். இதுபோன்ற சமயத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே 2021ம் ஆண்டின் வருகையையும் கொண்டாடலாம்.
விர்ச்சுவல் பார்ட்டியை திட்டமிடுங்கள் : இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க சிறந்த வழி, ஒரு விர்ச்சுவல் விருந்தை நடத்துவதும், வீடியோ அழைப்பில் நீங்கள் விரும்பும் பலரை சந்தித்து புத்தாண்டை கொண்டாடுவது ஆகும். ஒருவருக்கொருவர் திரையில் பார்ப்பதன் மூலம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளலாம். எந்த ஒரு மனித தொடர்பும் இல்லாமல் வெளி உலகத்திலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள விர்ச்சுவல் மீட்டிங் சிறந்தது.
ஆடம்பரமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்: (Make fancy appetizers) ஒரு விருந்தில் சிற்றுண்டி மிகவும் விரும்பப்படும் விஷயங்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே அவற்றை ஏன் மறக்க முடியாததாகவும், கவர்ச்சிகரமானதாகவும் மாற்றக்கூடாது. உங்கள் நண்பர்களுக்கு பிடித்த வகையில் உணவுகளை சமைத்து பார்ட்டியை கொண்டாடலாம்.
பிடித்த விளையாட்டை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம்: (Play Games) இந்த ஆண்டு நமக்கு வித்தியாசமாக வழக்கத்தை கற்று கொடுத்துள்ளது. மேலும் புதிய ஆண்டை வரவேற்க உரத்த இசை மற்றும் ஆல்கஹால், ஆட்டம் போன்ற விஷயங்கள் அனைத்தும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் இந்த புத்தாண்டை வரவேற்க உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஏதேனும் விளையாட்டுகளை விளையாடலாம்.
ஒரு வித்தியாசத்தை உருவாக்குங்கள்: இந்த ஆண்டு நிறைய துன்பங்களை அனுபவித்த ஏழை குழந்தைகள், அனாதைகள் மற்றும் எளிய மக்களுக்காக ஒரு நிதி பக்கத்தைத் தொடங்கவும். விருந்துக்கு முன் நன்கொடைகளை வழங்க உங்கள் நண்பர்களைக் கேட்கலாம். அந்த பணத்தை ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு கொடுப்பதன் மூலம் புத்தாண்டை மன நிம்மதியுடன் கொண்டாடலாம்.