முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

உங்கள் செல்லப்பிராணி ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி அதிகமாக நக்கி அல்லது சொறிந்தால், அவைகளுக்கு சொறி அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

  • 18

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களைப் போலவே, செல்லப் பிராணிகளுக்கும் ஒரு நல்ல தோல் பராமரிப்பு நடைமுறை தேவைப்படுகிறது. மனிதர்களைப் போல் செல்லப் பிராணிகள் உடல் வெப்பத்தை வியர்வையாகத் தோல் மூலமாக வெளியேற்ற முடியாது. எனவே செல்லப்பிராணிகளின் உடல் வெப்பமானது வாய் வழியாக சுவாசித்தல் மூலம் 80% வெப்பமானது மூக்கு, தோல், காது, முடி, கால் பாதம் ஆகியவற்றின் வழியாகச் சமநிலை படுத்தப்படுகிறது. உங்கள் நாய் அல்லது பூனையின் தோல் மனிதர்களின் தோல்களை ஒப்பிடும் போது மிகவும் மெல்லியதாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 28

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    எனவே கோடை காலங்களில் செல்லப்பிராணிகளுக்கு ஒரு நல்ல வெப்பம் மற்றும் தோல் சீர்ப்படுத்தல் நடைமுறைகள் தேவைப்படுகிறது, அவை ஈக்கள் மற்றும் உண்ணிகள், ஒவ்வாமை போன்றவற்றில் இருந்து பிராணிகளை பாதுகாக்க உதவுகிறது. செல்லப்பிராணிகளை அதிக வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் சிறந்த தோல் பராமரிப்புகளை மேற்கொள்ளவும் அவற்றை வளர்ப்போர் கோடைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 38

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    ஆரோக்கியமான உணவு : செல்லப்பிராணிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம், குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு உங்கள் நாயின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் நாயின் தோல்களுக்கு ஊட்டமளித்து, வலுவான எலும்புகள், தோற்றம், முடியின் வளர்ச்சி மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத நாய்கள் ரோமங்களை இழந்து செதில்களை போன்று உதிரத் தொடங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 48

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    ஒட்டுணிகளை கட்டுப்படுத்துதல் : செல்லப் பிராணியான ​​நாய்களுக்கு பொதுவாக ஒட்டுண்ணி தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, உங்கள் செல்லப்பிராணியை ஒட்டுண்ணிகளிலிருந்து பாதுகாக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய வேப்ப எண்ணெய் போன்றவற்றை ரோமங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து நல்ல சோப்பு அல்லது கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உங்கள் செல்லப்பிராணியின் குறிப்பிட்ட தேவைகளுக்கு சந்தையில் கிடைக்கும் சிறந்த தயாரிப்புகளை பயன்படுத்தி குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    சுத்தமான குடிநீர் : நீர் சத்து உள்ள உணவுகள் உங்கள் செல்லப்பிராணிக்கு கூடுதல் நீர் சத்தை வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீர் சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாக்க முடியும். செல்ல பிராணிகள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும், அவ்வப்போது அவை குடிக்கும் தண்ணீர் பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையெனில் தண்ணீரில் உள்ள தூசி மூலம் தொற்று ஏற்படலாம். எனவே வீட்டில் செல்ல பிராணிகளை நல்ல முறையில் பராமரித்து அவற்றின் ஆரோக்கியம் காப்போம்.

    MORE
    GALLERIES

  • 68

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    அடிக்கடி குளிப்பாட்டிவிடுதல் : சில செல்ல பிராணிகளுக்கு முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும், அதனால் அடிக்கடி அவற்றை குளிப்பாட்ட வேண்டும், இல்லையென்றால் அவற்றின்மேல் துர்நாற்றம் வரும், இதனால் நோய் தொற்று ஏற்படும். அதுமட்டுமின்றி, செல்லப்பிராணிகளின் ரோமங்கள் உதிர்வை தடுக்க, லிண்ட் ரோலர் ( Lint Roller ) பயன்படுத்தி, தேவையற்ற ரோமங்களை நீக்கவும், இப்படி செய்வதால் பிராணிகளின் ரோமங்கள் வீட்டில் ஆங்காங்கே இல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கமுடியும். உங்கள் செல்லப்பிராணியை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தலின்படி குளிப்பாட்டுதல் நல்லது.

    MORE
    GALLERIES

  • 78

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    ஒவ்வாமையில் இருந்து பாதுகாத்தல் : உங்கள் செல்லப்பிராணி ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி அதிகமாக நக்கி அல்லது சொறிந்தால், அவைகளுக்கு சொறி அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை கையாள்வதன் மூலமே ஒவ்வாமை போன்ற நோய்கள் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படாமல் தடுக்கலாம். ஒருவேளை, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருப்பின், உங்கள் கால்நடை மருத்துவரின் பரிந்துரையின்படி செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    கோடை காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படி பராமரிப்பது..? இந்த விஷயங்களை கவனியுங்கள்..!

    சிறுநீர், மலம் கழிக்க சொல்லித்தருதல் : நாய்க்குட்டிகள் பெரும்பாலும் திரவ உணவு சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். உணவு அருந்திய பிறகு, விளையாட முனையும்போது, பயப்படும்போது என பல்வேறு சமயங்களில் சிறுநீர் கழிக்கும். இதை உணர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் இடத்துக்குக் கூட்டி சென்று பழக்கப்படுத்தலாம். ஒரு செல்லப் பிராணிகளுக்கு சிறுநீர், மலம் எங்குக் கழிக்க வேண்டும் எனச் சொல்லி தருதல் அவசியம்.

    MORE
    GALLERIES