கோடைகாலம் வந்து விட்டால் ஏசி அல்லது ஏர்கூலர் இன்றி அதை சமாளிப்பது மிக கடினம். அதிகரிக்கும் வெயிலைப் போலவே, ஏசி பயன்பாட்டால் உங்கள் கரெண்ட் பில்லும் கூட தாறுமாறாக உயரக் கூடும். வியர்த்து விறுவிறுக்க ரூமுக்குள் நுழையும் நாம் உடனடியாக ஏசியை ஆன் செய்து, ரூம்-ஐ சற்று குளு, குளுவென வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால், இதில் நாம் செய்யும் சில தவறுகளால் மாத இறுதியில் மின்சாரக் கட்டணம் வெகுவாக அதிகரித்து விடுகிறது. இதை எப்படி குறைப்பது என தெரியாமல் நீங்கள் திணறிக் கொண்டிருப்பவர் என்றால், உங்களுக்கான 5 டிப்ஸ் இந்தச் செய்தியில் இருக்கிறது.
பொதுவாக ஏசியை நீங்கள் 24 - 26 டெம்பரேச்சரில் பயன்படுத்தி வந்தால் மின் கட்டணத்தை சற்று குறைக்க இயலும். இந்த டெம்பரேச்சரில் உங்களுக்கான கூலிங் குறைவாக இருக்கிறது என எண்ணுகிறீர்களா? ஆனால், இதுதான் சரியான அளவு என்றும், இதில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 24 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும்.
குளிர்ந்த காற்று வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் :
இது வெகு இயல்பாக செய்யக் கூடிய ஒன்றுதான். ஏசியை ஆன் செய்யும் முன்பாக ரூம் கதவை மூட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது மட்டுமல்லாமல், உங்கள் ஜன்னல்களும் இறுக்கமாக மூடியிருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் திரைகளை பயன்படுத்தலாம். சூரிய வெளிச்சம் உள்ளே இல்லை என்றால் ரூமில் வெகு விரைவாக கூலிங் கிடைக்கும்.
ஏசியுடன் ஃபேன் ஆன் செய்யலாம் :
இது சற்று முரண்பாடான விஷயமாக தோன்றலாம். ஆனால், ஏசியை ஆன் செய்த பிறகு ஃபேன் ஆன் செய்தீர்கள் என்றால், ரூமில் உள்ள வெப்ப காற்றை வெளியேற்றி, கூலிங் காற்றை எங்கும் கொண்டு செல்வதற்கு அது உதவிகரமாக இருக்கும். ரூமில் போதுமான கூலிங் கிடைத்த பிறகு நீங்கள் ஃபேன் ஆப் செய்து விட்டு, தொடர்ந்து ஏசியில் இருந்து கூலிங் பெறலாம்.