‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பார்கள், இது நமது அன்றாட வாழ்க்கையில் பணியிடங்களுக்கு மிகவும் பொருத்தக்கூடிய பழமொழியாகும். முதல் நாளிலேயே வேலைக்கு செல்லும் பணியிடத்தில் சிக்கல் ஏற்பட்டால், அது அடுத்தடுத்து நாட்களில் ஏன் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும் வரையிலும் கூட உங்களுக்கு பிரச்சனைகளை கொடுக்கலாம்.
மன அழுத்தம் நிறைந்த சூழலில் பணிபுரிவது எந்த ஒரு பணியாளரும் விரும்பாத ஒன்று. பணியாளர்கள் திறம்பட செயல்படுவதற்கு நிலையான அழுத்தத்தை உணராமல் வேலை செய்வதற்கு ஒரு பணியிடம் ஊக்கத்தையும் அமைதியான சூழ்நிலையயும் உறுதிப்படுத்த வேண்டும். எனவே தான் உங்கள் பணியிட சூழ்நிலை எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளை நீங்கள் எப்பொழுதும் கவனிக்க வேண்டும், அதனால் நீங்கள் அதை எதிர்த்துப் போராட தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். உங்கள் புதிய பணியிடத்தில் உங்கள் முதல் நாளிலேயே நீங்கள் காணக்கூடிய சில அறிகுறிகள் இங்கே உள்ளன.
1. நீங்கள் எதிலும் சேர்த்துக்கொள்ளப்படவில்லையா? : முதல் நாளிலேயே பணியிடத்தில் நீங்கள் தனியாக உணர்வது மிகவும் மோசமான விஷயம். உங்கள் முதல் நாளில், சக பணியாளர்களும், மேலாளரும் உங்களை வரவேற்கவும் புதிய பணிகளில் சேர்த்துக்கொண்டு ஊக்குவிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். பணியிடத்தில் இருப்பவர்கள் முதல் நாளிலேயே அவர்களின் புதிய பணியாளரைப் பற்றி அக்கறை காட்டவில்லை எனில், உங்கள் பணியிடத்தில் சிக்கல் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
3. அதிக கிசுகிசுக்களை பரப்புவது : பணியிடத்தில் மிகவும் விரும்பதகாத விஷயங்களில் ஒன்று கிசுகிசுக்களை பரப்புவது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் பரவினால், அது நல்ல அறிகுறி அல்ல. சக ஊழியர்கள் உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பற்றி கமெண்ட் அடிக்க எப்போதும் அனுமதிக்க கூடாது. உங்களை சுற்றிலும் கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகளை பரவிக்கிடப்பதை அனுமதிக்காதீர்கள், அது நிச்சயமாக நல்ல விஷயம் கிடையாது.
4. வேறு வேலை : நீங்கள் பணிக்கு சேர்ந்த பிறகு, நியமன கடிதத்தில் இருந்த வேலைக்கு பதிலாக முற்றிலும் வேறு பணிகள் ஒதுக்கப்பட்டால் உங்களுடைய பணியிடத்தில் ஏதோ சரியில்லை என்று பொருள். உங்கள் பணிக்காக பொறுப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டால், அது எதிர்பார்க்கப்பட்டவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், அது உங்கள் பணியிடம் ஒழுங்கமைக்கப்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும். வேலை நேரம், சம்பளம், வேலையின் நெகிழ்வுத்தன்மை போன்றவற்றுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும்.
5. அடுத்த நாளை பற்றிய பயம் : முதல் நாளே உங்களுக்கு வேலை செட் ஆகாமல் போய்விட்டால், அடுத்து நாள் வேலைக்கு செல்லவே பிடிக்காமல் போகலாம். ஏன் அது ஒரு வித பயமாக கூட மாறலாம். இந்த வேலை நிச்சயமாக அமைதியாகவோ அல்லது நிதானமாகவோ இருக்காது. இந்த வேலையில் இத்தகைய சிக்கல்கள் இருப்பதாக உங்கள் உள்ளுணர்வு உங்களுக்குச் சொன்னால், முதல் நாளிலிருந்தே உங்கள் வேலை எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொள்வது நல்லது.