சமூகத்தின் பார்வையில் ஒரு சில குணங்கள் மற்றும் தன்மைகள் இருப்பது தான் மரியாதையை பெற்று தருகிறது. பல இடங்களில், சூழலில் பாலியல் பாகுபாடு பார்ப்பதில்லை. இருப்பினும், ஒரு சில தருணங்களில், சமூகத்தில் சில குறிப்பிட்ட அறிகுறிகளின் அடிப்படையில் தான் ஒரு ஆண் அனைவராலும் மதிக்கப்படுகிறார். ஒரு ஆணிடம் பின்வரும் குணங்கள், அறிகுறிகள் மற்றும் பண்புகள் இருந்தால், அவர் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவார்.
மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் (எமோஷனல் இன்டலிஜன்ஸ்) : இமோஷனல் இண்டெலிஜன்ஸ் என்று கூறப்படும் இந்த தன்மைக்கு அடுத்தவரை காயப்படுத்தாத அளவுக்கு நடந்து கொள்ளும் புரிதல் தேவைப்படுகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல சென்சிட்டிவாக நடந்து கொள்ளும் ஆணை, அனைவரும் விரும்புவார்கள் மற்றும் மதிப்பார்கள்.