முகப்பு » புகைப்பட செய்தி » ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

சந்திரனை அதாவது நிலாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாள்காட்டியை வைத்து தான் இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள்.

  • 15

    ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

    இஸ்லாமிய சகோதர, சகோதர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானது ரமலான் எனப்படும் ரம்ஜான். தங்களது மதப்பிணைப்பை வலுப்படுத்தவும், சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக பழகும் நாள்களாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைவனால் மக்களுக்கு இந்நாளில் தான் அருளப்பட்டது என்ற நம்பிக்கையும் மக்களிடம் அதிகளவில் உள்ளது. இதனால் தான் உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் அனைவரும், ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். மேலும் திருக்குரானை உச்சரித்து வழிபாடும் நடத்தும் புனித நாள் தான் ரம்ஜான்.

    MORE
    GALLERIES

  • 25

    ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

    இந்தாண்டு (2023) ரமலான் நோன்பு எப்போது? சந்திரனை அதாவது நிலாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாள்காட்டியை வைத்து தான் இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ஒவ்வொரு முறையும் இந்த தேதிகள் மாற்றமடையும். மெக்காவில் பிறை தெரியும் நாளை வைத்து தான் ரமலான் நோன்பு தொடங்கும். அதன் அடிப்படையில் இந்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ல் தொடங்கி ஏப்ரல் 21 ல் முடிவடைகிறது. அடுத்த பிறை நிலவைக் காணும் வரை புனித மாதத்தின் முடிவைக் குறிக்கும் வரை 29 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.

    MORE
    GALLERIES

  • 35

    ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

    ரம்ஜானில் சந்திரனைப் பார்ப்பதன் முக்கியத்துவம்: சந்திரனைப் பார்ப்பது ரமலான் மாதத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது. ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதற்கு முன்பு, பிறை நிலவைக் காண மக்களும் மத அதிகாரிகளும் இரவு வானத்தைப் பார்க்கிறார்கள். இது பல ஆண்டுகளாக மதத்தில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. சந்திரனைப் பார்க்கும் மரபுகள் பின்பற்றப்படும் ஷபான் மாதத்தின் 29 ஆம் நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ரமலான் மாதம் தொடங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

    புனித ரம்ஜான் மாதத்தில் மக்கள் ஏன் நோன்பு இருக்கிறார்கள்?: ரமலான் மாதத்தில் நோன்பு  ஒரு வழிபாடாகவே பார்க்கப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். இதோடு இந்த நாள்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் தலையாயக் கடமையாகும். இந்த உதவியைத் தான் சகத் என்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 55

    ரமலான் 2023 : நோன்பு எப்போது தொடங்குகிறது? கடைபிடிக்கும் முறைகளும் காரணமும்!

    இதோடு மட்டுமின்றி இந்த நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், திருக்குரான் அனைத்தையும் வாசிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையையும் இருக்க வேண்டும். இதோடு இந்த நாள்களில் கெட்ட பழக்கங்களையும் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும் என  நம்பப்படுகிறது

    MORE
    GALLERIES