முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

Samantha : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் சிப்பிப்பாறை நாயின் புகைப்படத்தை பகிர்ந்து அதை ‘சூப்பர் மாடல்’ என்று குறிப்பிட்டுள்ளார்..

  • 18

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    போமெரியன், ஜெர்மன் ஷெப்பர்ட் (அல்ஷெஷன்), லாப்ரடோர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், கிரேட் டேன், பக் போன்ற 'டாக் ப்ரீடுகளின்' மீதான ஆசை மற்றும் மோகம் குறைந்துவிட்டது என்று கூற முடியாது. அதே ஆசை, அதே மோகம் இந்திய நாய்கள் மீதும் ஏற்பட தொடங்கி உள்ளது என்று கூறலாம். எந்த ப்ரீட் ஆக இருந்தால் என்ன? ஒவ்வொரு நாயும் மனிதர்களின் அன்பிற்கு தகுதியானது தானே!

    MORE
    GALLERIES

  • 28

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    ஆனாலும் கசப்பான உண்மை என்னவென்றால், இந்திய நாய் இனங்கள் உலகில் அதிகம் கவனிக்கப்படாத இனங்களில் ஒன்றாகும்.ஏனெனில் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டு நாய் இனங்களையே தங்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் சமீப காலமாக சில பிரபலங்கள் இந்திய நாய் இனங்களை வளர்ப்பது மற்றும் அவைகளை பற்றி அதிகம் பேசுவது - மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்த பட்டியலில் நடிகை சமந்தா ரூத் பிரபுவிற்கு தனி இடம் உண்டு. தான் வளர்க்கும் ஒரு இந்திய நாய் மீதான தனது அன்பு எப்படிப்பட்டது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ள சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திக்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 38

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    "சூப்பர்மாடல் ஃ பீல்ஸ் #சிப்பிப்பாறை #வாட்ஏபியூட்டி" என்று கேப்ஷனிட்டு தான் வளர்க்கும் சிப்பிப்பாறை நாயின் புகைப்படத்தை பகிந்து உள்ளார், சமந்தா. சிப்பிப்பாறை மட்டுமல்ல பெரிதும் அறியப்படாத அதே சமயம் அனைவருக்கும் பிடித்தமான சில இந்திய நாய் இனங்களும் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 48

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    இந்தியன் பரியா நாய் அதாவது நாட்டு நாய் : நிச்சயமாக இந்தியன் பரியா நாய் என்கிற பெயர் உங்களை குழப்பம் அடைய செய்து இருக்கலாம். இவைகள் 'நாட்டு நாய்கள்' என்று பிரபலமாக அறியப்படுகின்றன. இவைகள் இந்தியாவின் அனைத்து தெருக்களிலும் சுற்றித் திரிவதை எளிதாக பார்க்க முடியும். இவ்வகை நாய்கள் மனிதர்களோடு மிகவும் இணக்கமாக, நட்பாக பழக கூடியது.

    MORE
    GALLERIES

  • 58

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    கொம்பை : கொம்பை இன நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவைகள் என்று அறியப்படுகின்றன, ஆனால் கொம்பை மிகவும் விசுவாசமான நாய்கள் ஆகும். பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இது ஓரு சிறந்த தேர்வாக அமைகிறது. இவைகள் பொதுவாக தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 68

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    கன்னி: சுறுசுறுப்பு, வேகம் மற்றும் வேட்டையாடும் திறன்களுக்கு பெயர் பெற்ற நாய் தான் - கன்னி. பொதுவாக இவைகள் வேட்டையாடும் நாய்கள் என்றே அழைக்கப்படுகின்றன, கன்னி நாய்கள் ஒரு இரையை வேட்டையாட தங்கள் புலன்களை நம்பியுள்ளன. இவ்வகை நாய்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 78

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    ராஜபாளையம் : இவ்வகை நாய் தென் தமிழ்நாட்டில் அதிகாமாக காணப்படுகின்றன. அரசர்கள் மற்றும் ராணிகள் வாழ்ந்த காலங்களில் ராஜபாளையம் நாய்கள் பிரபுத்துவத்துடன் தொடர்புடையதாக இருந்ததால் இவைகள் அரச நாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 88

    சிப்பிப்பாறை நாயை ‘சூப்பர் மாடல்’ எனக் குறிப்பிட்ட சமந்தா.. சில இந்திய நாய்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்..

    முதொல் ஹவுண்ட் அதாவது முதொல் வேட்டை நாய்: தமிழ்நாட்டில் கன்னி நாய்களை போல முதொல் நாய் இனமானது கர்நாடகாவின் வேட்டை நாய் இனமாகும். இவைகள் மாநிலத்தின் முதோல் நகரில் அதிகம் காணப்படுகின்றன. வேட்டையாடும் திறமைக்கு பெயர் போன முதொல் ஹவுண்ட் சிறந்த காவல் நாய்களும் ஆகும். புத்திக்கூர்மை மிக்க இந்த நாய் இனம் மிகவும் சுறுசுறுப்பானவைகளும் கூட!

    MORE
    GALLERIES