மாஸ்டர் பிளாஸ்ட்டரான சச்சின் டெண்டுல்கர் 50 வயதை எட்டி விட்டாலும் இளமையில் எப்படி இருந்தாரோ இன்னும் அதே போலவே தனது ஃபிட்னஸை மெயின்டெயின் செய்து வருவது அவரது ரசிகர்களை மட்டுமல்ல பல தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் தனது அற்புதமான ஆட்டத்தை தவிர, சச்சின் 11 வயது சிறுவனாக இருந்த போதிலிருந்தே கிரிக்கெட் மீதான தனது அர்ப்பணிப்பபை அபாரமாக வெளிப்படுத்தினார். முழு அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தை தொட்ட சச்சின், விளையாடி கொண்டிருக்கும் போதே பேட்டிங்கில் மட்டுமல்ல தனது ஃபிட்னஸையும் சிறப்பாக வைத்திருந்தார். கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.