ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

ஒரு பெண் இப்படித்தான் சிந்திப்பாள், இதைத்தான் விரும்புவாள் என்று சமூகம் ஒரு பொதுப்புத்தியை கட்டமைத்துள்ளது. உண்மையில் இந்த சித்திரிப்புக்கும், யதார்த்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

 • 16

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வாழ மனப் பொருத்தம் தான் அடிப்படை தேவை. ஒரு பெண்ணுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை ஒரு ஆண் புரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று புலம்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.உண்மையை சொல்லப்போனால் பெண்ணை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷமல்ல.

  MORE
  GALLERIES

 • 26

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  உங்களிடத்தில் பேசும்போது, ஒரு செயலை செய்யும்போது ஒரு பெண் என்ன மாதிரியான உடல் மொழியை வெளிப்படுத்துகிறாள் என்பதைப் பொறுத்து அவர்களை புரிந்து கொள்ளலாம்.ஒரு பெண் இப்படித்தான் சிந்திப்பாள், இதைத்தான் விரும்புவாள் என்று சமூகம் ஒரு பொதுப்புத்தியை கட்டமைத்துள்ளது. உண்மையில் இந்த சித்திரிப்புக்கும், யதார்த்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

  MORE
  GALLERIES

 • 36

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  கட்டுடல் மேனி: கனக்கச்சிதமான உடல் அமைப்புடன், சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் நிறைய தமிழ் சினிமாக்களை பார்த்திருப்பீர்கள் போல. நம்முடைய உடல் பலன், தோரணையைத்தான் ஒரு பெண் விரும்புவாள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது முற்றிலும் தவறு.பெரும்பாலும் ஒரு ஆணின் உடலை காட்டிலும், மனதையே பெண் நேசிக்கிறாள். காதல் உறவுகளோடு அணுக வேண்டும், தன் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த வேண்டும் என்பதே பெண்ணின் எதிர்பார்ப்பு ஆகும்.

  MORE
  GALLERIES

 • 46

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  பொருளாதார ஆதரவு: நம்முடைய பேங்க் பேலன்ஸ், பர்ஸ் கனம் ஆகியவற்றை பார்த்தே பெண் நம்மை விரும்புவாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைவிட தவறான கண்ணோட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையை சொல்வதென்றால் பெண் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கவே விரும்புகிறாள். யாருடைய தயவையும் பெண் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், மன ரீதியான ஆதரவுதான் பெண்ணுக்கு தேவைப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  அறிவார்ந்த விவாதன்கள்: எதையாவது கலகலவென்று பேசுகிறேன் என்ற பெயரில் வெட்டிப்பேச்சு பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உங்களின் வேடிக்கையான பேச்சுக்களை பெண்கள் ரசிப்பதாக நீங்களே நினைத்துக் கொண்டால், அது உங்களுடைய தவறுதானே தவிர, அவர்களது தவறல்ல. உண்மையில் அர்த்தமுள்ள வகையில், பலனுள்ள வகையில் பேசும் ஆண்களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  உண்மையாகவே ஒரு பெண் ஆணிடம் விரும்புவது இவ்வளவு தானாம்!

  குடும்ப அமைப்பு: திருமணம் செய்து கொண்ட கையோடு குழந்தைகளை பெற்றுக் கொண்டு ஒரு குடும்பமாக செட்டில் ஆகிவிட வேண்டும் என பெண் விரும்புவதாக நீங்கள் கற்பனை வாதம் செய்து கொள்கிறீர்கள். உண்மையில் பெண்ணுக்கும் சில கனவுகள் இருக்கின்றன.ஒருவேளை நல்ல வேலையில் இருந்தாலும் கூட, புதிதாக அடியெடுத்து வைத்துள்ள வாழ்க்கையில் உங்களையும், உங்கள் குடும்ப உறவுகளையும் முழுமையாக புரிந்து கொள்ள அவர்களுக்கு கால அவகாசம் தேவை. உங்கள் வாழ்க்கை வட்டத்திற்குள் பெண் தன்னை முழுமையாக பொருத்திக் கொள்ள போதுமான அவகாசத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

  MORE
  GALLERIES