நீ என்னை விட கொடுத்து வைத்த நபர் : உங்கள் வாழ்க்கை துணை உங்களை உயிருக்கு, உயிராக நேசித்தாலும் சரி அல்லது வெறுத்தாலும் சரி, இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக் கூடாது. ஏனென்றால், இதற்கு முன்பு அவர்கள் ஏதோ சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தது போலவும், இப்போது உங்களுடன் இணைந்த பிறகு தான் வசந்தம் வீசுவது போலவும் அர்த்தமாகிவிடும்.
என்னிடம் பணம் இல்லை : கணவராக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் தன்னிடம் உள்ள பண இருப்பு விவரம் குறித்து உண்மை பேசுவதில்லை. தனக்கு என்று வரும்போது நிறைய செலவு செய்யும் இவர்கள், தன் வாழ்க்கை துணை செலவு செய்தால் அது தண்டச் செலவு என்று குறிப்பிடுகின்றனர். இதனாலாயே பணம் இல்லை என்று மழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
முன்னாள் காதலை மறந்து விட்டேன் : பெரும்பாலான நபர்களுக்கு முந்தைய காதல் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் அந்த உறவு துண்டிக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலர் நட்பு ரீதியாக தொடர்ந்து பழகி வருவார்கள். ஆனால், இதனை தன் வாழ்க்கை துணையிடம் மறைத்து விட்டு, பழைய காதலை தூக்கியெறிந்துவிட்டதாக பொய் சொல்வார்கள்.
நான் அப்படி சொல்லவில்லை : அடடா, இந்த சூழ்நிலையை வாழ்க்கையில் ஒருமுறையேனும் நீங்கள் அனுபவித்திருக்க வாய்ப்பு உண்டு. கோபத்தில், அவசரத்தில் எதையாவது சொல்லி திட்டி விடுவது உண்டு. அதுகுறித்து எதிர் தரப்பில் விளக்கம் கேட்கும்போது நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று சமாளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
டேட்டிங் ஆப் பயன்பாடு : திருமண வாழ்க்கையில் ஒருவருக்கு, ஒருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். ஆனால், சிலர் சும்மா இருக்கட்டுமே என்று டேட்டிங் ஆப்கள் மூலமாக ஜொல்லுவிடுவார்கள். இதை நீங்கள் கண்டறியும் பட்சத்தில், அது சிங்கிளாக இருக்கும்போது இன்ஸ்டால் செய்தது, டெலிட் செய்ய மறந்து விட்டேன் என்று சொல்வார்கள்.
இன்றும் பணி முடிய தாமதமாகும் : எல்லோருக்குமே ஏதோ ஒருநாள் அலுவலகப் பணி முடிய தாமதம் ஆகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வசதியாக இதே விஷயத்தை பயன்படுத்தி வேறு சில காரியங்களை சிலர் சாதிப்பார்கள். நண்பர்களுடன் அல்லது தோழிகளுடன் ஊர் சுற்றி விட்டு வந்து, வீட்டில் அலுவலகத்தின் மீது பழியை தூக்கி போடுவார்கள்.எல்லோருக்குமே ஏதோ ஒருநாள் அலுவலகப் பணி முடிய தாமதம் ஆகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வசதியாக இதே விஷயத்தை பயன்படுத்தி வேறு சில காரியங்களை சிலர் சாதிப்பார்கள். நண்பர்களுடன் அல்லது தோழிகளுடன் ஊர் சுற்றி விட்டு வந்து, வீட்டில் அலுவலகத்தின் மீது பழியை தூக்கி போடுவார்கள்.