இப்பூவுலகில் காதல் என்ற ஒரு அழகிய உணர்வு மட்டும் காலத்திற்கும் மாறாமல் இருக்கிறது. இதில் எண்ணற்ற காதல் கதைகள் வெற்றிகரமான காதல் கதையாக மாறியுள்ளது. அதுவே, பல காதல் கதைகள் எதோ ஒரு காரணத்தால் முறிந்து விடுகின்றன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டதாக ஒரு தலை காதல் உள்ளது. ஒருதலை காதலில் ஒருவர் தனது காதலை தனது அன்புக்குரியவரிடம் சொல்லலாமா, அவர் நம்மை ஏற்றுக்கொள்வாரா அல்லது ஏதேனும் தவறாக நினைத்துக் கொள்வாரா என்ற எண்ணங்கள் மனதை நோகடிக்கும்.
நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்கு உங்களை போன்று அதே காதல் உணர்வு இருக்கிறதா என்ற எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றும். சில நேரங்களில், உங்கள் உணர்வுகளைப் வெளிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரலாம். ஆனால் மற்ற நேரங்களில், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். இதைக் கருத்தில் கொண்டு, உங்கள் ஒருதலை காதலை எப்படி ஒரு வெற்றிகரமான காதலாக மாற்றலாம் என்பதை பின்வருமாறு காண்போம்.
நீங்கள் அவர்களைப் பற்றி நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: நீங்கள் அவர்களை சுற்றி இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எந்த குழப்பமும் இல்லாமல் உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துங்கள். உங்களை பற்றி சிந்திக்க வைக்கும் சில விஷயங்களை செய்யுங்கள். “இந்த படம் உன்னை நினைவூட்டுகிறது” என்று நீங்கள் அவர்களுக்கு சொன்னால் போதும், அவர்கள் உங்களை எதிர்ப்பது கடினம்.
நல்ல நண்பராக இருங்கள்: அவர்களுக்கு நம்பகமான நண்பராக இருப்பதை விட வேறு ஆறுதல் எதுவும் இல்லை. அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், மேலும் அவர்களின் சுதந்திர விருப்பத்துடன் அவர்கள் உங்களைச் சார்ந்து இருக்கட்டும். நெருக்கமான உறவுகள் என்று வரும்போது மோகத்தை விட நம்பிக்கை ஒரு பெரிய அச்சாணியாக இருக்க வேண்டும். முதலில் நீங்கள் அவர்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் துணை விரும்புவார்கள். எனவே முதலில் அவர்கள் நம்பகமான நண்பராக இருப்பதை விட சிறந்த வழி எதுவுமில்லை.
உங்களின் சிறந்த குணங்களை வெளிப்படுத்துங்கள்: நீங்கள் அவர்களைச் சுற்றி இருக்கும்போதெல்லாம் உங்கள் சிறந்த குணங்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் அவர்களுடன் இருக்கும் போது எவ்வளவு பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். அவர்களும் உங்களிடம் அதே மாதிரியான உணர்வைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும். உங்கள் மிகப்பெரிய சாதனைகளை நுட்பமாக வெளிப்படுத்துங்கள் மற்றும் ஒரு நல்ல ஆளுமையை சித்தரிக்கவும். அவர்கள் எதை இழக்கிறார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.
அன்புக்குரியவர் மீது ஆவேசப்பட வேண்டாம் : நீங்கள் அவர்களை நேசிப்பதால் சமூக ஊடகங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எப்போதும் கண்காணிக்க வேண்டாம். இது மிகவும் மோசமானது. மேலும், அவர்கள் உங்கள் ஆவேசத்தைப் பற்றி அறிந்தால், அவர்கள் உங்களுடன் மீண்டும் பேசுவதைத் தவிர்ப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் எல்லைகள் மிக முக்கியமானவை என்பதால், இதுபோன்ற விஷயங்களை செய்வது ஆரோக்கியமற்ற பழக்கம்.
அவர்களுடனேயே இருங்கள்: உங்கள் உணர்வுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன்பே சில சமயங்களில் நீங்கள் விரக்தியடையலாம். அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் அவர்களைச் சுற்றி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் கவனிப்பு விலைமதிப்பற்றது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். இருப்பினும், அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த எல்லா முயற்சிகளையும் செய்து, உங்கள் உறவில் எந்தஒரு முன்னேற்றத்தையும் உணரவில்லை என்றால், அவர்கள் உங்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள் என்றால், உங்கள் ஒருதலைப்பட்ச உறவை விட்டுவிடுவது நல்லது.