உங்க துணைக்கு செக்ஸ் மூடே வர மாட்டேங்குதா..? இதை மட்டும் பண்ணுங்க போதும்...எல்லாம் தானா நடக்கும்..!
மூட் என்பதை விட துணைக்கு உங்களுடன் இணைய முற்றிலும் விருப்பம் இல்லை எனில் வற்புறுத்தாதீர்கள். மனையாக இருந்தாலும் கணவராக இருந்தாலும் நோ மீன்ஸ் நோ என்னும் விஷயத்தை கடைபிடிப்பது சிறந்த உறவுக்கு நல்லது. இந்த புரிதல் உறவை மேலும் அழகாக்கலாம்.


மூடு இல்லாத செக்ஸ் வழக்கத்தினால் சலிப்படைந்துவிட்டீர்களா. உடலுறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வுதான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசைதான். இவை அனைத்திற்கும் செக்ஸ் மூடு இல்லை என்றால் திருப்பதி கிடைக்காது. மேலும் பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் மூடு, அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையை குறிக்கிறது.


அநேகமாக உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளும் உங்கள் செக்ஸ் ஊக்கத்தைப் பாதிக்கின்றன. பெண்களின் பாலுணர்வு மூடு, வலிமிகுந்த முன் அனுபவம் போன்ற குறிப்பிட்ட உடல் பிரச்சினைகளினாலும் கூட ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மன இறுக்கம், தன்னம்பிக்கை குறைவு, தூக்கம் பாதிக்கப்படுதல் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளும் கூட, ஒரு விளைவைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மற்றும் ஒரு சிறந்த முறையில் உடலுறவு கொள்வதன் மூலம் செக்ஸ் மூடை அதிகரிக்கலாம். அதேபோல் மூட் என்பதை விட துணைக்கு உங்களுடன் இணைய முற்றிலும் விருப்பம் இல்லை எனில் வற்புறுத்தாதீர்கள். மனையாக இருந்தாலும் கணவராக இருந்தாலும் நோ மீன்ஸ் நோ என்னும் விஷயத்தை கடைபிடிப்பது சிறந்த உறவுக்கு நல்லது. இந்த புரிதல் உங்கள் உறவை மேலும் அழகாக்கலாம்.


நேரமும் இடமும் :முக்கியமாக செக்ஸ் நடக்கும் இடம் நல்ல நறுமணத்துடனும், காற்றோற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் இடமாக பார்த்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் எந்த நேரத்திலும் அவர்களது மனநிலை மாறாமல் உங்கள் செக்ஸ் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பொதுவாக பெண்கள் பொறுமையாக, மெதுவான, அழகான செக்ஸ் அனுபவங்களை தான் விரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் நீங்கள் பெண்களுடன் தனியாக இருந்தாலும் நேரம் குறைவு காரணமாக செயல்படாதீர்கள். அதற்காக முதலில் அவர்களது சம்மதத்தை வாங்குங்கள். அவர்கள் உங்களுடன் போனில் செக்ஸாக பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை நீங்கள் தொடலாம் என்பதில்லை. இதற்கு அவரின் சம்மதமும் முக்கியம். அப்போது தான் சிக்கலின்றி இருக்க முடியும். நேரத்தை கருத்தில் கொள்ளும்போது உங்கள் நேரம் மட்டுமல்ல அவர்களின் நேரமும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.


மசாஜ் செய்து மயக்குங்கள் :நீங்கள் ஒருவருக்கொருவர் செக்ஸ் மசாஜ் செய்து துவங்கலாம். செக்ஸ் மசாஜ்கள் உங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க செய்யும். பாலியல் மசாஜ் செய்ய, லிபிடோ அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட சில நல்ல அத்தியாவசிய எண்ணெய்கள் தேவை.


மல்லிகை மசாஜ் : மல்லிகை மசாஜ் என்பது மல்லிகை எண்ணெயை கொண்டு செய்யப்படுவது. இந்த மல்லிகை மசாஜ் இனிமையான வாசனை கொண்டது மட்டுமல்ல, உங்களை திருப்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும்.


ரோஸ் ஆயில் மசாஜ்: ரோஸ் ஆயில் மசாஜ் உங்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த எண்ணெய்களில் ஒன்று. மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்கவும் ரோஸ் ஆயில் உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் வாசனை உங்கள் பாலியல் மூடை தூண்டும்.


ரொமென்ஸை மறக்காதீங்க : உங்கள் துணையின் சம்மதம் கிடைத்து விட்டால் உடனடியாக தொடங்கி விடாதீர்கள். செக்ஸ் மூடை அதிகரிக்க முதலில் அவர்கள் மீது நீங்கள் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர வேண்டும் அதே நேரத்தில் அந்த நேரத்தை நீங்கள் ரொமென்டிக்காகவும் மாற்ற வேண்டும். அவர்கள் தலை முடியை மெதுவாக கொதிவிடுவது. அவர்களது விரல்களை பிடித்து வருடுவது அன்பான வார்த்தைகளை பேசுவது போன்ற செயல்களை செய்யலாம்.


முதலில் உங்கள் துணையின் ஆசையை தூண்ட வேண்டும் அதற்காக நீங்கள் அவர்களின் கண்களை சில நொடிகள் தொடர்ந்து பார்ப்பது, அவர்களது உதட்டை தொடர்ந்து பார்ப்பது அவர்களது கழுத்து பகுதியை பார்ப்பது என ரொமென்ஸாக இதை செய்தால் அந்த பெண்ணிற்கு நீங்கள் துவங்கப்போவது தெரிந்துவிடும். அந்த பெண்ணிற்கு ஆசை இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் கேட்காமலேயே அந்த பெண்ணிடம் இருந்து உங்களுக்கு மூத்தங்கள் கிடைக்கலாம். இதை போன்று செய்தால் அவர்களின் செக்ஸ் மூடு அதிகரிக்கும்.


பாடி லாங்குவேஜ் : பொதுவாக உங்கள் துணைக்கு உங்கள் மீது செக்ஸ் ஆசை வந்து விட்டால் அவர்கள் சில உடல் மொழிகள் மூலம் ஆசையை வெளிப்படுத்துவார்கள். அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதிஷ்டத்தை இழந்து வீட்டீர்கள் என அர்த்தம். பொதுவாக முத்தம் கொடுப்பார்களே தவிர அவர்களுக்கு பெரும்பாலும் துவக்க பிரச்னை இருக்கும். அதனால் இந்த விஷயத்தை நீங்கள் முதலில் துவங்குவது நல்லது. செக்ஸ் மூடிற்கு வேகமாக ஸ்டார்ட் செய்யாதீர்கள். மெதுவாக அவர்களுக்கு நீங்கள் முத்தம் கொடுத்து முக்கியமாக அவர்கள் நெற்றியில் முத்தத்தை ஆரம்பித்து, துவங்குங்கள். பின்னர் உங்கள் துணையை ஒருமுறை பாருங்கள் சிக்னல் எப்படி உள்ளதென்று.


பாலுணர்வு என்று வரும் போது ஆண்களோ பெண்களோ பிரச்சினைகள் என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான செக்ஸ் மூடு இருப்பதில்லை. இதிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக சில பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடே இருப்பதில்லை அல்லது குறைந்த ஈடுபாடு இருப்பது உண்டு. இதனால் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மேற்சொன்னவற்றை பின்பற்றி உங்கள் வாழ்வை இனிதே துவக்குங்கள்.