ஒன்று சேரும் போது காதல் எந்த அளவுக்கு மகிச்சியான ஒன்றோ அதை விட பிரேக்கப் செய்து கொள்ளும் போது பல மடங்கு வழியை தர கூடியது. ஒரு சிலரால் மட்டுமே காதல் பிரிவை கடந்து இயல்பு நிலைக்கு சில நாட்களில் வர முடியும்.பெரும்பாலானோர் பிரேக்கப் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் வலிமிகுந்த உணர்ச்சிகளை மனரீதியாக அனுபவிக்கிறார்கள். பிரிவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோக உணர்வுகளை ஒருவர் திறம்பட கையாளவில்லை என்றால், முடிவுகள் தேவையற்ற ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைக்க கூடும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். பிரேக்கப்பை எதிர்கொள்ளும் ஒருவர் தனது மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் சில வழிகளை தற்போது பார்க்கலாம்.
உணர்வுகளை மனதிற்குள் வைத்து பூட்ட வேண்டாம் : காதல் பிரிவால் வாடும் ஒருவர் தனது மனதின் ஆழத்தில் உள்ள சோகங்களை வெளியே கொட்டி விடுவது மிக முக்கியம். தனக்கு வேண்டிய மற்றும் நம்பகமான நண்பர் அல்லது உறவினரிடம் மனதில் இருக்கும் வருத்தம் மற்றும் சோகத்தை பற்றி வெளிப்படையாக பேசி ஆறுதல் தேடி கொள்ள வேண்டும். பிரிவை சமாளிக்க ஒருவர் முதலில் கடைபிடிக்க வேண்டியது இந்த டிப்ஸை தான். ஏனெனில் உணர்ச்சி ஆரோக்கியத்தை சேதமடையாமல் பார்த்து கொள்ள மனதில் சோகங்களை அடக்கி வைக்காமல் வெளியே கொட்டுவது எளிய மற்றும் சிறந்த தீர்வு.
மகிழ்ச்சி தருவதை செய்யலாம் : பிரிவால் வாடும் ஒருவர் அந்த சோக அலையில் மூழ்கி விடாமல் இருக்க தனது எது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் என்பதை தேடி ஹெடி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு, பயணம் என எதை செய்தால் ஒருவருக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறதோ அதில் யோசிக்காமல் ஈடுபட வேண்டும். விஷயங்கள் சிறியதாக இருந்தாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி இழந்த நம்பிக்கையை மீட்டு தரும்.
உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க கூடாது : எப்போதுமே கோபத்தில் அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது வாழ்க்கையில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனாலும் சூழல் காரணமாக சிலர் இடத்தி யோசிக்க மாட்டார்கள். பிரிவின் போதும் இது பொருந்தும் என்பதால், பிரேக்கப்பின் போது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.
எதிர்மறை விஷயங்களை விட்டுவிடுங்கள் : பிரிவு ஏற்பட்டால் கூடவே வருத்தம் ஏற்படுவது என்பது இயல்பு. என்றாலும் சோகம் காரணமாக நடந்ததை மட்டுமே நினைத்து பொழுதை போக்கி எதிர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது ஆபத்தானது. எது நடந்திருந்தாலும் பின்னால் சென்று நடந்தவற்றை மாற்ற முடியாது என்பது நிதர்சனம். எனவே கடந்த கால அனுபவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தை சிறந்ததாக்கி கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
சோகமாக இருக்கலாம், தவறில்லை : உணர்ச்சிகளை மடை மாற்ற முயற்சிக்கும் அதே நேரத்தில் அவற்றை மிகவும் கட்டுப்படுத்தியும் வைக்க கூடாது. அது பேராபத்தில் முடியும். எனவே பிரிவால் ஏற்படும் சோகத்தை மறக்க அழுதால் தேவலாம் என்று நினைத்தால் அழுது தீர்த்து விடலாம். மோசமான சோக உணர்வுகள் எப்போதெல்லாம் வெளிப்படுகிறதோ அப்போதெல்லாம் சிறிது நேரம் வருந்த ஒருவர் தனக்கு தானே அனுமதி கொடுத்து கொள்வது ரிலாக்ஸாக உதவும். ஆனால் இதை பழக்கமாக்கி கொள்ள கொடுத்து என்கிறார்கள் நிபுணர்கள்.