ரெட் ரோஸ் : உலகம் முழுவதும் காதலின் அடையாளம் என்றால் அது சிவப்பு ரோஜாதான்! இது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை மட்டும் உணர்த்துவது அல்ல. காதலின் ஆழத்தை உணர்த்தக் கூடியது. எந்த அளவிற்கு அந்தக் காதலில் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். அதிலும் இளஞ்சிவப்பு ரோஜா ரொமான்ஸை உணர்த்துவதாகவும் அடர் சிவப்பு இன்னும் என் காதலை முழுமையாக வெளிபடுத்தவில்லை என்றும் உணர்த்துகிறது.
மஞ்சள் ரோஸ் : மஞ்சள் நேர்மையான நட்பை வெளிப்படுத்தக் கூடியது. ஆதலால் உங்கள் காதலி சிறந்த தோழியாகவும் தோல் கொடுக்கிறார் என்றால் மஞ்சள் ரோஜவை இணைத்துக் கொடுங்கள். அதேபோல் காதலர் தினத்தன்று அதிகமாக அன்பு வைத்திருக்கும் நண்பருக்கும், தோழிக்கும் கூட ரோஜா கொடுக்கலாம் எனவே அவர்களுக்கு இந்த அழகிய மஞ்சள் ரோஜா கொத்தை பரிசளியுங்கள்.