முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

காதலர் தின வார கொண்டாட்டத்தில் மற்ற எல்லா நாட்களையும் விட இந்த கிஸ் டே கொண்டாட்டம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

  • 16

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    காதலர் தின வார கொண்டாட்டத்தில் 7ஆவது நாளில் வருகிறது கிஸ் டே. காதலர் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக வருகின்ற நிலையில், இது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே ரோஸ் டே, காதல் வெளிப்பாடு நாள், சாக்கலேட் டே, வாக்குறுதி நாள், பரிசு நாள், அரவணைப்பு தினம் என இந்த வாரத்தில் பல கொண்டாட்டங்களை நடத்தி முடித்தவர்கள் இறுதியாக இந்த கிஸ் டே மற்றும் காதலர் தினத்தை கொண்டாட இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    முத்தத்துக்கு எங்களுக்கும் என்ன தொடர்பு என பெரு மூச்சு விடும் சிங்கிள்ஸா நீங்கள்? கவலையை விடுங்கள். உங்கள் அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை ஒரு முத்தத்தின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தலாம். இந்த முத்தம் என்பது காதலன் அல்லது காதலிக்கு மட்டும்தான் என்றில்லை. உங்கள் மனம் கவர்ந்த குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் என்று பலருக்கு இந்த அன்பை பரிமாறிக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    எப்போது தொடங்கியது கிஸ் டே : கிஸ் டே மிக சரியாக எப்போது தொடங்கியது என்ற வரலாறு இல்லை. இருப்பினும், உலகின் பல நாடுகளில் இந்த பாரம்பரியம் பிரபலமாகி வருகிறது. மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் நேசத்தை பரிமாறும் வாய்ப்பை இந்த கிஸ் டே வழங்குகிறது. தந்தை, தாய், சகோதரன், சகோதரி என்று குடும்ப உறுவுகளுக்குள் அன்பை வெளிப்படுத்துகின்றவர்கள் வீட்டில் சாதாரணமாக ஒரு முத்தத்தை பரிமாறி கடந்து செல்கின்றனர்.அதே சமயம், காதலர்களுக்கு இடையிலான முத்தம் என்றால் இது கொண்டாட்டம் மிகுந்ததாக இருக்கிறது. மனதில் ரொமான்ஸ் வரவழைக்கின்ற இடத்தைச் தேடிச் சென்று, அங்கு கிஸ் டே கொண்டாடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 46

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    கிஸ் டே முக்கியத்துவம்  : காதலர் தின வார கொண்டாட்டத்தில் மற்ற எல்லா நாட்களையும் விட இந்த கிஸ் டே கொண்டாட்டம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால், பரிசு நாள், வாக்குறுதி நாள் போன்றவற்றை ஒப்பிடுகையில், அரவணைப்பு நாள் மற்றும் கிஸ் டே என்பது நேரடியாக தொடுதல் தொடர்புடையது என்பதால் இங்கு உடல் அளவிலான உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. காதல் மலர்ந்த இருவருக்குள், அந்த பந்தத்தை மேலும் பலப்படுத்துவதாக இந்த கிஸ் டே அமைகிறது. குதூகலம், கொண்டாட்டம், கேளிக்கை போன்றவற்றுக்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    கிஸ் டே கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன  : பணம், பொருள் போன்ற செயற்கையான விஷயங்களால் அல்லாமல், இயற்கையான வழியில் அன்பை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை கிஸ் டே ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படியொரு இயல்பான விஷயம் இருப்பதையே பலரும் மறந்து விடுகின்றனர் என்பதால், அவர்களுக்கு நினைவூட்டும் விதமாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    முத்தம் காமத்திற்கானது மட்டுமே அல்ல.. கிஸ் டே கொண்டாட்டம்..! சிங்கிள்ஸ் கண்டிப்பா படிங்க..

    வயது, கலாச்சாரம், இனம், மொழி போன்றவற்றை கடந்ததொரு உலகளாவிய உணர்வு பரிமாற்ற மொழியாக முத்தம் பார்க்கப்படுகிறது. அதிகம் பேசுவதற்கான வாய்ப்புகளை குறைத்து, எளிமையாக உணர்வுகளை பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. நீங்களும் இந்த தினத்தை மலரும் நினைவுகளாக மாற்றிக் கொள்ள, பிடித்தமான இடம், நேரம் போன்றவற்றை முடிவு செய்து கிஸ் டே கொண்டாடலாம். 

    MORE
    GALLERIES