காதலர் தினத்தில் மக்கள் தங்கள் அன்புக்குரிய லைஃப் பார்ட்னருக்கு சிறப்பு பரிசுகளை கொடுத்து அதை மறக்க முடியாத நாளாக மாற்றுகிறார்கள். பொதுவாக முன்பெல்லாம் பிப்ரவரி 14 ஆண்டு மட்டுமே காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சமீப ஆண்டுகளாக காதலர் தினத்திற்கு முந்தைய நாட்கள் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் பிப்ரவரி 7 தொடங்கி காதலர் தினம் வரை காதலை வளர்க்கும் பல நாட்கள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உங்களது பார்ட்னரை சர்ப்ரைஸ் செய்ய காதலர் வாரத்தின் நாட்கள் தனித்துவமாக எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
பிப்ரவரி 7 - ரோஸ் டே : காதல், பாசம் மற்றும் பேரார்வத்தின் உன்னதமான அடையாளமாக ரோஜாக்கள் இருக்கின்றன. காதலர் வாரத்தின் தொடக்கத்தை ரோஜாக்கள் குறிக்கின்றன. உங்கள் அன்பை பறைசாற்றும் வகையில் உங்களது லைஃப் பார்ட்னருக்கு சிவப்பு ரோஜாவை பரிசளிக்கலாம். ரோஜாக்கள் மற்றும் பிற வகையான பூக்களின் தீம்டு பூங்கொத்துகள் கூட இருக்கின்றன. இவற்றை உங்களது வாழ்வின் சிறப்புக்குரிய ஒருவருக்கு பரிசளிக்கலாம்.
பிப்ரவரி 8 - ப்ரப்போஸ் டே : இந்த நாள் நீங்கள் விரும்புபவரிடம் உங்கள் காதலை முன்மொழிய மற்றும் உங்கள் லைஃப் பார்ட்னடரிடம் காதல் வாழ்க்கைக்கு உறுதி அளிக்கவும் அர்பணிக்கப்பட்டது. உங்களது பார்ட்னரை உங்களோடு மிகவும் ரொமான்டிக்காக இருக்கும்படி கேட்கலாம். ரொமேன்டிக் டின்னர்ஸ் அல்லது டேட்ஸ் ப்ரப்போஸ் செய்வதற்கான மிகவும் பிரபலமான யோசனைகளில் ஒன்றாகும்.
பிப்ரவரி 9 - சாக்லேட் டே : சாக்லேட்ஸ்கள் மிகவும் விசேஷமானவை மற்றும் இன்னோசென்ஸை குறிக்கின்றன. இந்த நாளில் உங்கள் லவ் பார்ட்னருக்கு அல்லது நீங்கள் விரும்புபவருக்கு ஒரு பாக்ஸ் சாக்லேட்ஸ் வாங்கி கொடுக்கலாம். உங்கள் பார்ட்னர் இனிப்புகளை மிகவும் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் அவர்கள் நிச்சயமாக உங்களது இந்த பரிசை பாராட்டுவார்கள். சாக்லேட் பாக்ஸுடன் சில ரோஜாக்களை பரிசளிப்பதன் சர்ப்ரைஸை ஸ்பெஷலாக்கலாம்.
பிப்ரவரி 10 - டெடி டே : டெடி பியர்ஸ் இன்னோசென்ட் லவ்-ன் சின்னமாகும். உங்கள் பார்ட்னருக்கு டெடி பியர் பரிசளிப்பதன் மூலம் அவர் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தலாம். இந்த நாளில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு டெடியை பரிசாக வழங்குகிறார்கள். இந்த பரிசை வாங்கும் நபர் வாழ்நாள் முழுவதும் நினைவுசின்னமாக அந்த டெடியை வைத்திருப்பார்.
பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே : வாக்குறுதிகள் சிறப்பு வாய்ந்தவை, அவை நிறைவேற்றப்பட வேண்டியவை. இந்த நாள் ஒருவர் தனது லவ் பார்ட்னருக்கு வாக்குறுதிகள் அளிப்பதை குறிக்கிறது. உங்கள் பார்ட்னருக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் அவருடனான அன்பையும் உறவையும் உயிர்ப்புடன் வைத்திருப்தை பற்றியது. இந்த நாள் அதை நினைவில் கொள்ள உதவுகிறது.
பிப்ரவரி 12 - ஹக் டே : பொதுவாக அரவணைப்புகள் அன்பின் அழகான வடிவம். கட்டிப்பிடித்து அரவணைப்பது என்பது ஒருவரை பாதுகாப்பாக, ஒருவரின் அன்பான அரவணைப்பில் இருக்கிறோம் என்பதை உணரவைக்கும். ஒரு இறுக்கமான மற்றும் அன்பான அரவணைப்பு அனைத்து கவலை மற்றும் வலிகளை போக்கிவிடும். பிப்ரவரி 12-ஆம் தேதி மக்கள் தங்கள் வாழ்விற்கு துணையாக இருக்கும் நெருக்கமானவர்களை கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்துகின்றனர்.
பிப்ரவரி 13 - கிஸ் டே : முத்தங்கள் என்பது ஒருவர் மற்றவரிடம் காட்டக்கூடிய அன்பின் மிக நெருக்கமான மற்றும் தூய்மையான வடிவமாகும். இந்த நாளில் நீங்கள் உங்கள் பார்ட்னரை முத்தமிடுவதன் மூலம் அவர்கள் உங்களுக்கு ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டலாம். நெருக்கம், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறிக்கிறது முத்தம்.
பிப்ரவரி 14 - காதலர் தினம் : இறுதியாக உலகம் முழுவதும் பிப்ரவரி 14 கொண்டாடப்படும் காதலர் தினம் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏனெனில் இந்நாள் எல்லா வகையிலும் அன்பை கொண்டாடுகிறது. தம்பதிகள் இந்த நாளில் காதல் பயணத்தை திட்டமிடுகிறார்கள் அல்லது மகிழ்ச்சியாக இருக்க ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி கொள்கிறார்கள். எனவே இந்த நாள் உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.