காதலர் தினம் நெருங்கும் நிலையில் திரும்பிய பக்கமெல்லாம் அதுகுறித்த செய்திகள், தகவல்கள், கள் என உலா வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், தற்போது வரை தனக்கென்று துணை கிடைக்காதவர்கள் அதுகுறித்த கவலையை மனதில் மறைத்துக் கொண்டு, வெளியே சிங்கிளாக இருக்கிறோம் என்று கெத்தாக சொல்லிக் கொள்ளும் காட்சிகளையும் பார்த்து வருகிறோம்.
முன்பெல்லாம் 90ஸ் கிட்ஸ்களில் சிங்கிள் வாழ்க்கை குறித்து பேசி வந்தனர். ஆனால், இப்போதெல்லாம் பருவ வயதை எட்டிய உடனேயே, நானும் சிங்கிள்தான் என உரிமை கோருகின்றனர். ஆனால், உண்மையாக பார்க்க போனால், திருமணம் செய்ய வேண்டிய வயதையும் கடந்து, உண்மையாகவே திருமணம் செய்ய பிடிக்காமல், தனித்து வாழும் வாழ்க்கையின் சுகத்தை அனுபவிப்பவர்கள் மட்டுமே சிங்கிள் என்று சொல்லலாம்.
அதிலும், நாம் சிங்கிளாக இருப்பதென்று முடிவு செய்துவிட்டால், இச்சமூகம் அத்தோடு விட்டுவிடுமா என்ன? எப்போது, அதுகுறித்த பரிதாபத்திற்குரிய கேள்விகளை நம்மிடம் முன்வைப்பார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி, சிங்கள்களுக்கு என்று பெரிய வாழ்க்கை வட்டம் இருக்கிறது என்கிறார் நிஷித் அரோரா என்ற அனுபவஸ்தர். 48 வயதான இவர், டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். சிங்கிள் வாழ்க்கையில் உள்ள சவால்கள் மற்றும் மகிழ்ச்சி குறித்து விவரிக்கிறார் அவர்.
நீங்க ஏன் சிங்கிளாக இருக்கீங்க என கேட்பது தொந்தரவாக இல்லையா ? : நிச்சயமாக இல்லை. இந்தக் கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மேலும் இதற்கு நான் எப்போதுமே பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். சின்னதாக புன்னகைப்பேன் அல்லது பேச்சை திசை திருப்பி விடுவேன். அப்படி இல்லை என்றால், நான் சிங்கிளாக இருப்பதால் உங்களுக்கென்ன கவலை என்று கேட்பதுண்டு.
ஏன் சிங்கிள் வாழ்க்கை மிகுந்த கேள்விக்குரியதாக உள்ளது : நீங்கள் சிங்கிளாக இருந்தால் புன்னகைத்தால், மக்கள் அதை கடந்து செல்ல முயற்சிப்பார்கள். நீங்கள் திருமணமானவர் என்றால், உடனே அறிவுரை சொல்ல தொடங்கி விடுவார்கள். நீங்கள் ஓரினச் சேர்க்கையாளராக அல்லது சிங்கிளாக அல்லது திருமணமானவராக அல்லது துணையை இழந்தவராக அல்லது விவாகரத்து பெற்றவராக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் சமூகம் உங்களிடம் கேள்வி கேட்கும். அதை கடந்து சென்று விட வேண்டும்.
நீங்கள் சிங்கிளாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டியது எது : எனக்கும் கடந்த கால காதல் வாழ்க்கை உண்டு. நான் காதலித்த பெண் பௌத்த மதத்தை ஏற்று, ஒரு துறவியாக மாறி விட்டார். துடிப்பான, கேளிக்கை மிகுந்த பெண்ணாக இருந்த அவர், எப்படி ஒரு அமைதியான, ஆன்மீக பக்தி கொண்டவராக மாறினார் என்பதை எண்ணி வியந்தேன்.என்னை பிரிந்த பிறகும் கூட அந்தப் பெண் மகிழ்ச்சியாக, அமைதியாக வாழுவதை பார்க்க முடிந்தது. ஆகவே, சிங்கிளாக இருப்பதிலும் வாழுவதற்கு நிறைய இருக்கிறது என்பதை கற்றுக் கொண்டேன். தொழில் செய்கிறேன், நிறைய பயணம் செய்கிறேன். புத்தம்புது இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியை உணருகிறேன்.