டெட்டி பியரின் தோற்றம் : டெட்டி பியரின் குண்டான தோற்றம் பெண்களை அதிகம் ஈர்க்கும். அதன் க்யூட்டான பெரிய காது, மூக்கு அவர்களை வெகுவாகக் கவரும். பெண்களுக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அந்தக் குழந்தைத்தனத்தை டெட்டி பியர் தட்டி எழுப்பும். அதனால்தான் அதைக் கண்டதும் குழந்தை போல் துள்ளி குதிக்கின்றனர்.
சிறந்த தோழன் : சில சமயம் காதலர் முன், அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றே டெட்டி பியரை கொஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அவர் டெட்டி பியரை அல்ல. உங்களைக் கொஞ்சுகிறார்கள் என்று அர்த்தம். அதேபோல் அவர்களுக்கு ஏதேனும் கவலை என்றாலும் கட்டி அணைத்து அழுவார்கள். அப்போது அது உற்ற தோழனாக இருக்கும். அதனால்தான் தூங்கும்போதும் நண்பனைப் போல் கட்டி அணைத்து தூங்குகின்றனர். காதலன் அருகில் இல்லாத சமயத்திலும் அவரை நினைத்து கட்டி அணைப்பார்கள், கொஞ்சுவார்கள்.