உலகின் கடைசி துளி மிச்சத்தில் கூட காதல் நிறைந்திருக்கும். இப்பிரபஞ்சத்தின் பேரன்பு காதல். அதை அள்ளி அனைக்க காத்திருக்கும் நாள்தான் காதலர் தினம். அதை கொண்டாட வெறும் ஒரு நாள் பத்தாது. அதை அணு அணுவாக ரசித்து கொண்டாடுவதற்காக உருக்கப்பட்டதுதான் காதலர் தினக் காலண்டர். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14 வரை ஒரு வாரம் காதலை தெகிட்டத் தெகிட்ட கொண்டாடலாம். எப்படி என்பதைக் காணலாம்.
பிப்ரவரி 7 : ரோஸ் தினம் : வாரத்தின் முதல் நாளை ரொமாட்டிக்காகத் தொடங்க வேண்டும் என்பதற்காக ரோஸ் கொடுத்து காதலை பரிமாரிக் கொள்ளவே இந்த நாள். அதேபோல் ரோஜா காதலின் அடையாளம். சிவப்பு ரோஜாக்கள் காதல் உணர்வை தூண்டும் என்பதற்காகவும் ரோஸ் டே எனக் கொண்டாடப்படுகிரது. எனவே காதலர்களே ஒரு ரோஜா அல்ல ரோஜாக் கொத்தையே கொண்டு போய் கொடுத்து ஆச்சரியமூட்டுங்கள்.
பிப்ரவரி 8 : காதலைச் சொல்லும் தினம் : இது காதல் வாழ்க்கைக்குள் நுழைய மிக முக்கிய நாள். யாரெல்லாம் காதலைச் சொல்லக் காத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நாள். எனவே கொஞ்சமும் தயங்காமல் கேட்டில் லைட் டின்னரை ஏற்பாடு செய்யுங்கள். ரொமாடிங்காக காதலைச் சொல்லுங்கள். அல்லது அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று மறக்க முடியாத அளவிற்கு காதலைச் சொல்லுங்கள்.
பிப்ரவரி 10 : டெட்டி தினம் : சொல்லவே வேண்டாம். பெண்களின் ஆல் டைம் ஃபேவரட் டெட்டி பியர்தான். அது க்யூட், சப்பி என பெண்களால் கொஞ்சப்படுவதுண்டு. இரவில் கட்டியனைத்து தூங்கவும் செய்வார்கள். எனவே உங்கள் நினைவாக டெட்டிப் பியர் வாங்கிக் கொடுத்தால் நீங்கள் இல்லாத சமயத்தில் டெட்டியைக் கொஞ்சுவார்கள். எனவே பெரிய அளவிலான டெட்டி பியரை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள். பின் நீங்கள் கேட்காமலேயே முத்த மழைதான்.
பிப்ரவரி 12 : முத்த தினம் : முத்த நாள் என்றதும் பாய்ந்து ஓடாதீர்கள். முதலில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ எனச் சொல்லுங்கள். பின் கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்து அவரை காதலிப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள் . அவர் உங்கள் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்ததில் எந்த அளவு அதிஷ்டசாலி என கூறுங்கள். அதன்பிறகு எங்கு கொடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.
பிப்ரவரி 13 : கட்டியணைத்தல் தினம் : இதுவும் முத்த நாளைப் போன்றதுதான். கட்டி அனைப்பதால் அவர்கள் மனமகிழ்ழ்சி அடைவார்கள் என்பதை விட பாதுகாப்பாக உணர்வார்கள். கட்டிபிடி வைத்தியம் தனிமையையும் மழுங்கடிக்கச் செய்யும் என்பார்கள். அதனால் நீங்கள் எப்போதும் உடன் இருப்பீர்கள் என்கிற நேர்மறை எண்ணத்தை உருவாக்கும்.
பிப்ரவரி 14 : காதலர் தினம் : இதுதான் வாரத்தின் கடைசி நாள். காதலர் தினம். உங்களுக்கான நாளை கொண்டாட தயாராகுங்கள். இது நாள் வரை வாழ்ந்த நாட்களை அர்த்தமானதாக மாற்றும் நாள். உங்கள் இணைப்பை அர்த்தமானதாக மாற்றுங்கள். உங்கள் காதலியோ/ காதலரோ இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுத்து காதலைக் கொண்டாடுங்கள்.