தம்பதிகளின் பாலியல் உறவு என்று வரும்போது, அதை மேம்படுத்த, நெருக்கத்தை அதிகரிக்க என்று பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதில் ரோல் பிளே என்பது முக்கியமானது! ரோல்பிளே என்பது பாலியல் உறவில் மிகவும் முக்கியமான விளையாட்டு. வழக்கமாக இல்லாமல், ஃபன்னாக, புதியதாக வெவ்வேறு தோற்றத்தில், கற்பனை பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் போல அறிமுகம் ஆகி, பாலியல் உறவை எக்சைட்டிங் ஆக மாற்றுவார்கள். நம் நாட்டில் இவை பிரபலமாக இல்லை என்றாலும், ரோல்பிளே திருமணமானவர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றவும், பாலியல் உறவு மகிழ்ச்சியாகவும் உதவும். சரி, செக்ஸ் உறவு மேம்பட, இந்த ரோல்பிளே ஐடியாக்களை முயற்சி செய்யலாம்.
பேராசிரியர் – மாணவர் பாத்திரங்கள் : ஃபேண்டசி உலகில், பேராசரியர், கல்லூரி மாணவர் உறவு என்பது அதிகமாக விரும்பப்படும் ஃபேண்டசி என்று கூறப்படுகிறது. பொதுவாகவே, ஆசிரியரை மணக்கும் நிகழ்வுகள் நிறைய உள்ளன. ஆசிரியர் / ஆசிரியை மேல் கிரஷ் ஏற்படுவது மிகவும் பொதுவானது தான். ஃபேண்டசி உலகுக்கு கேட்கவா வேண்டும்? இதை ரோல்பிளே பாத்திரங்களாக நீங்கள் முயற்சி செய்யலாம்.
பிளம்பர் மற்றும் அறிமுகமில்லாத பெண் : முதல் முறை பார்த்தவுடன் ஈர்ப்பு தோன்றுவது இயல்பு. அது போல, செக்ஸ் என்று வரும் போது, வீட்டில் ஏதேனும் பழுது பார்க்கும் வேலைக்கு வருபவர் மீது ஈர்ப்பு தோன்றும், பாலியல் உறவில் ஈடுபடுவது என்பது மிகவும் பிரபலமான ரோல்பிளேவாகும். இது இன்ஸ்டன்ட் ஆக ஒரு ஸ்பார்க்கை உண்டாக்கும், பாலியல் உறவை மேம்படுத்தும்.
பப்பில் அல்லது மாலில் பார்த்த ஸ்ட்ரேஞ்சர் : ஏற்கனவே கூறியுள்ளது போல, தம்பதிகள் ஒருவரை ஒருவர் அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள் போல தங்களை ரோல் பிளே செய்து கொள்வது என்பது உறவை சுவாரஸ்யமாக மாற்றும், பப் அல்லது ஷாப்பிங் மால் அல்லது ஏதேனும் ரெஸ்டாரன்டில் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல பாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாம். பார்த்தவுடன் ஈர்ப்பு தோன்றிவிட்டது, அதனால் ஏதாவது பிக்அப் லைன் அல்லது தோற்றத்தைப் பற்றிய பாராட்டுக்கள் ஆகியவற்றை கூறி, இருவரும் ஸ்டிரேஞ்சர்ஸ் போல தங்களை காட்டிக் கொண்டால், பாலியல் உறவு மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவ்வாறு செய்யும் பொழுது தன் கணவன் அல்லது மனைவியிடம் எது அதிகமாக ஈர்க்கிறது என்பதைப் பற்றி இருவருமே நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
மசாஜ் செய்பவர் மற்றும் கஸ்டமர் : இது ரோல் பிளே பாத்திரங்களாக இருந்தாலும் கூட தம்பதிகள் ஒருவருக்கொருவர் மசாஜ் செய்து கொள்வது என்பது உடலையும் மனதையும் லேசானதாக்கி, நிம்மதியாக, அமைதியாக உணர வைக்கும். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய உணர்வுகளை தூண்டிவிடும். மசாஜ் செய்யும் போதே தலை முதல் கால் வரை மிகவும் ரிலாக்ஸ் ஆகி உடலில் எண்டோர்பின் என்ற மகிழ்ச்சியாக உணர வைக்கும் ஹார்மோன் சுரக்கும். இதுவே கணவன் அல்லது மனைவி செய்யும் பொழுது அதனுடைய தன்மை பல மடங்கு அதிகரிக்கும். எனவே மசாஜ் செய்பவர் மற்றும் வாடிக்கையாளர் என்றால் பாத்திரத்தில் இருவருக்கும் நெருக்கம் மிக மிக அதிகரிக்கும்.