முகப்பு » புகைப்பட செய்தி » கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

அம்மாவாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமோ, அதே போல, சொல்ல முடியாத துக்கமும் வருத்தமும் இருக்கும்.

 • 112

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  கர்ப்பமாக இருப்பது தெரிந்த அந்த நொடி முதல், இது தான் அது தான் என்று வரையறுத்து கூறவே முடியாத நேரம் வரை, ‘அம்மா’வாக இருப்பது என்பது பல விதமான எமொஷன்களை உள்ளடக்கியது என்று கூறலாம். மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, பெருமை என்று அழகான உணர்வுகள் முதல், உடலை, மனதை பாதிக்கும் நெகட்டிவ் உணர்வுகள் வரை, தாய்மையில் எல்லா உணர்ச்சிகளும் அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 212

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  அம்மாவாக இருப்பது என்பதில் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் கூட. அம்மாவாக மாறுவதற்கு முன்னும் பின்னும் பெண்ணின் உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட முடியாது. பாதுகாப்பு, அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு, வெளி உலக பயம் என்று ஏகப்பட்ட விஷயங்களுடன் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கு, பல விதமான எமோஷன்கள் தாக்குவது சாதாரணம் தான்.

  MORE
  GALLERIES

 • 312

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  அமெரிக்காவில் ஒரு கிளினிக்கல் சைகாலஜிஸ்ட், அம்மாக்களுடன், மெட்டர்னல் எமோஷன்ஸ் நிறைந்த சூழலில் பணியாற்றி வருகிறார். அம்மாக்களுக்கு தெரபி கொடுக்கும் போது, அவர்களுக்கு உணர்வுகளை கண்காணித்து குறித்து வைக்க சொல்லியிருக்கிறார். அதில், பகலில் எப்படி இருக்கும், எப்போது அதீதமாக உணர்ச்சி வசப்படும் நிலை வருகிறது, என்று எல்லாவற்றையும் கண்காணிக்க சொல்வாராம். அதன் அடிப்படையில், பெண்களுக்கு தெரபி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 412

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  முரண்படும் உணர்வுகள்: பொதுவாகவே, பலருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் தோன்றும். இது அம்மாக்களுக்கும் பொருந்தும். உதாரணமாக குழந்தை வேகமாக வளர்வதை கண்டு எந்த அளவுக்கு ஒரு அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு வருத்தமும் தோன்றும். குழந்தை வளர்ந்து விட்டதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் அம்மாக்கள், குழந்தையுடன் இனி அதிகமாக நேரம் செலவிட முடியாது, ‘அய்யோ இவ்வளோ சீக்கிரம் வளர்ந்துட்டா’ என்று வருத்தமும் படுவார்கள். எனவே இரண்டு முரண்படும் உணர்ச்சிகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்வது என்பது இயல்பு.

  MORE
  GALLERIES

 • 512

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  எமோஷன்ஸ் தெளிவாகவும் இருக்கலாம், குழப்பமாகவும் இருக்கலாம் : சில நேரங்களில் உணர்வுகள், மார்னிங் சன்ஷைன் என்று கூறுவது போல மனம் உற்சாகமாக இருக்கும். சில நேரங்களில், சலிப்பாக, பயமாக, எரிச்சலாகவும் இருக்கும். உதாரணமாக, சோஷியல் மீடியாக்களில் எவ்வளவோ அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி, பிரசவம், குழந்தை வளர்ப்பு, மைல்ஸ்டோன்ஸ் அனுபவம் பற்றி பெருமையாக போஸ்ட் செய்வார்கள். அதற்கு நேர்மாறாக, குழந்தை பிறப்பு, வளர்ப்பு, என்று பெண்கள் எதிர்கொண்ட சவால்களையும், சிக்கல்களையும் ஷேர் செய்வார்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  உதாரணமாக, கைக்குழந்தையுடன் நாள் முழுவதும் செலவிடுவது என்பது சில நேரங்களில் போரடிக்கும். வீட்டில் செய்வதற்கு நிறைய வேலை இருக்கும் ஆனால் எதுவுமே செய்யத் தோன்றாது எல்லாவற்றுக்கும் அம்மாவைத் தேடும் குழந்தை, வளர்ந்த பிறகு அம்மாவிடம் பேச 10 நிமிடத்துக்கு மேல் எதுவும் இருக்காது. ஒரு அம்மாவாக, இது பெரிய ஏமாற்றமாக இருக்கலாம். அதனால், எப்போதுமே தாய்மையுணர்வு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

  MORE
  GALLERIES

 • 712

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  எதிர்பாராத நேரத்தில் அழுகை வரும் : எப்போது அதிகமாக எமோஷனலாகி அழ வேண்டும் போல இருக்கும் என்பதை கணிக்கவே முடியாது. குறிப்பாக, உலகையே பாதித்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், பெரும்பாலான அம்மாக்கள் தீவிரமாக எரிச்சலடைந்தார்கள். உதாரணமாக, ஒரு சாக்ஸ் தொலைந்து போனதற்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல வீட்டையே புரட்டிப் போட்ட பெண்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய விஷயங்களை எளிதாகக் கையாளத் தெரிந்த பெண்களுக்கு, கோவிட் காலத்தில் சின்ன விஷயங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதாவது, வழக்கமாக சின்ன சின்ன பிரச்சனைகள், ஒரு கட்டத்தில் பெரிய அளவில் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி எதிர்பாராத தருணத்தில் உடைந்து அழைத்து வைக்கும்.

  MORE
  GALLERIES

 • 812

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  தாங்க முடியாத அளவுக்கு துக்கமும், கவலையும் இருக்கலாம் : அம்மாவாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமோ, அதே போல, சொல்ல முடியாத துக்கமும் வருத்தமும் இருக்கும். குழந்தையை வளர்ப்பது, குழந்தையின் முதல் நாள் பள்ளி, என பல தருணங்கள் நினைவில் இருக்கும். ஆனால், குழந்தைகள் வளர வளர ஏற்படும் இடைவெளி, குழந்தைகளுக்கென உருவாகும் தனி உலகம், இவை எல்லாம் துக்கத்தையும், தனக்கென்று எதையும் செய்து கொள்ள முடியாத சூழலில் வருத்தத்தையும் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 912

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  மற்றவர்கள் ஏற்படுத்தும் குற்றவுணர்வு : பெரும்பாலான அம்மாக்கள், சூழ்நிலைகளால் ஏற்படும் கில்ட்டினஸ் (guilt) மற்றும் ஜட்ஜ்மென்டல் முடிவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதை இப்படி செய்யவேண்டும், குழந்தைக்கு இப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது, குழந்தை ஒல்லியாக இருக்கிறது, குண்டாக இருக்கிறது, சோம்பேறியாக இருக்கிறது, என்று எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்துக்கு அம்மாக்களை குறை சொல்ல பெரிய கூட்டமே இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 1012

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், பிள்ளையுடன் சரியாக நேரம் செலவிட முடியவில்லை, அதிக நேரம் குழந்தையுடனே இருக்கிறேன், வேலையை சரியாக பார்க்க முடியவில்லை என்று குற்ற உணர்ச்சியும் தோன்றும்.

  MORE
  GALLERIES

 • 1112

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  நெகட்டிவ் எமோஷன்களை தவிர்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு : தாய்மை என்பது ஒரு எமோஷனல் பொக்கே என்பது ஒரு பக்கம் இருக்கையில், எதிர்மறையாக எதையுமே சிந்திக்கக் கூடாது, 100% நெகட்டிவிட்டியை தவிர்க்க வேண்டும் என்று தீவிரமாக கட்டுப்படுத்துவார்கள். அதாவது, கோவமே படக்கூடாது, கோவம் வந்தால் கட்டுப்படுத்த வேண்டும், எரிச்சலை வெளிக்காட்டக் கூடாது, திட்டக் கூடாது, மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  கோபம், அழுகை, சிரிப்பு... அம்மாக்கள் அவ்வப்போது காட்டும் இந்த எமோஷன்களையும் புரிஞ்சுக்கோங்க..!

  இவ்வாறு பல உணர்வுகளை எதிர்கொள்ளும் : அம்மாக்களுக்கு, உளவியல் நிபுணர் தரும் ஒரு சிறிய டிப்ஸ்: “எல்லாவற்றையும் நீங்கள் அனுமதியுங்கள், ஒவ்வொரு அம்மாவும் எதிர்கொள்ளும் ஃபீலிங்ஸ் இயல்பானது தான், ஆனால் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியம். உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் இந்த உணர்வுகள் தொடரும்!”

  MORE
  GALLERIES