தற்போது தனக்கான ஜோடிகளை தேட அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கிய இடத்தில் உள்ளது டிண்டர் செயலியாகும். அதில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் பேர் இந்த செயலியை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அதாவது சாதாரணமான நாட்களை விட பத்து சதவீதம் அதிகமாக இதை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் 35 சதவீத அதிக ஸ்வைப் ஆக்டிவிட்டி இருப்பதும், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டேட்டிங் சண்டேவில் கிட்டத்தட்ட ஒரு நொடிக்கு 12 பேர் தங்களது பயோகிராபி அப்டேட் செய்துள்ளதாகவும் 25 போட்டோக்களை அப்லோட் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
சமீபத்தில் இந்த செயலி புதிய வசதிகளை சேர்த்துள்ளது. அது தங்களுடைய ரிலேஷன்ஷிப் கோல்ஸ் பற்றிய விவரங்களையும் நம்மால் அப்டேட் செய்து கொள்ள முடியும். அவர்கள் வெறும் நட்புக்காக இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள் அல்லது வாழ்க்கைத் துணையை தேடி செயலியை பயன்படுத்துகிறார்களா என்பது போன்ற விவரங்களை நீங்கள் இதில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் டிண்டர் செயலியின் வழியாக தங்களுக்கான வாழ்க்கை துணையை தேடும் சிங்கிளாக இருப்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகளையும் கொடுத்துள்ளனர்.
சரியாக தேர்வு செய்தல் : உங்களுக்கு ஏற்றபடி பொருத்தங்களை தேர்வு செய்ததற்கு முதலில் உங்களுடைய அடிப்படை விவரங்களையும் கல்வி, வேலை போன்ற விவரங்களையும் சரியாக அப்டேட் செய்வது அவசியம். இதன் மூலமே உங்களுக்கு பொருத்தமற்ற பல்வேறு ப்ரொபைல்கள் வடிகட்டப்பட்டு உங்களுக்கு ஏற்ற சில ப்ரொபைல்கள் மட்டும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
நான்கு என்னும் மந்திர எண் : இவை அனைத்தையும் விட உங்களுடைய புகைப்படத்தை வைத்து தான் பலரும் உங்களது ப்ரொபைலை பார்வையிடுவார்கள். எனவே சரியான போட்டோக்களை சரியான லைனப்பில் அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். உங்களுடைய முதல் புகைப்படம் மிகத் தெளிவானதாக உங்கள் முகத்தை பிரகாசமாக காண்பிப்பதாக இருக்க வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்த புகைப்படங்களை விதவிதமான கோணத்தில் சரியாக தெளிவாக அழகாக இருக்கும் படி அப்டேட் செய்ய வேண்டும்.
தொடர்பு கொள்ளும் திறன் : இவை அனைத்தையும் தாண்டி பொருத்தம் உங்களுக்கு சரியாக இருந்ததெனில் அவர்களை தொடர்பு கொள்ளும் விதத்தில் நம் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும். எனவே முதலில் மெசேஜ் அனுப்புவதற்கும் அல்லது அவர்களுடன் நான் பேச்சுக்களை வளர்ப்பதற்கு பயப்படாமல் சரியான விதத்தில் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களுக்கான துணையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.