முதல் முறை அதை செய்யும்போது எப்படி இருக்கும் என்று பதற்றுத்துடன் இருப்பார்கள். பெரும்பாலான பெண்களுக்கு முதல் முறை செக்ஸ் உறவின் போது ஏற்பட போகும் வலி குறித்து மிகுந்த கவலை இருக்கும். அதெல்லாம் வலி எதுவும் இருக்காது என்று பொத்தாம், பொதுவாக பூசி, மொழுகுவதால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால், வலியை எப்படி குறைக்கலாம் என்று தெரிந்து கொண்டால் ஓரளவுக்கு பலன் கொடுக்கும். அதற்கான டிப்ஸ் இதோ.
லூப்ரிகேட் செய்து கொள்ளவும் : துணையுடன் உங்களுடன் உறவு வைத்து கொள்வதற்கு முன்பாக பெண்ணுறுப்பில் லூப்ரிகண்ட் தடவி கொள்ளலாம். இது நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு முன்பாக அதிகமாக முத்தம் பரிமாறுவது, ஆரத் தழுவுவது போன்ற முன் விளையாட்டுகளை மேற்கொள்ளும்போது, முதல்முறை செக்ஸ் என்பதை சமாளிக்க உதவியாக இருக்கும்.
ஈஸியான பொசிஷன்களை தேர்வு செய்யவும் : எந்தெந்த பொசிசன்களில் செக்ஸ் செய்ய முடியும் என்று நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், கடினமான பொசிசன் ஒன்றை முதல்முறையிலேயே தேர்வு செய்ய வேண்டாம். மிஷனரி அல்லது ஸ்பூனிங் போன்ற எளிமையான பொசிஷன்களை நீங்கள் முயற்சி செய்தால் அவ்வளவாக வலி தெரியாது.
மனதளவில் தயார் ஆகவும் : முதலிரவில் உங்கள் மெத்தை முழுவதுமாக ரோஜாக்களால் நிரம்பியிருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். நீடித்த மௌனங்கள் காணப்படும். சற்று பதற்றமும் இருக்கும். முதல்முறை செக்ஸ் செய்யும்போது கர்ப்பப்பை பாதையில் வளையம் போன்று உள்ள தசை (ஹமன்) கிழிந்து, மிக அதிகமான வலி ஏற்படும். அதை எதிர்கொள்வதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
நல்ல இடத்தை தேர்வு செய்ய வேண்டும் : முதல் முறை என்பதை விட, அதை எங்கு செய்யப் போகிறோம் என்பது மிக முக்கியமானது. நல்ல ரிலாக்ஸ் மற்றும் சௌகரியம் தரும் இடம் என்றால் செக்ஸ் வைத்துக் கொள்ள நல்ல மனநிலையை உருவாக்கி தரும். சிலர் குளியல் அறை அல்லது கார் போன்ற குறுகலான இட பரப்பளவில் செக்ஸ் செய்ய முயற்சி செய்கின்றனர். அது சௌகரியமாக அமையாது.
வலி நிவாரணிகள் வேண்டாம் : முதல் முறை செக்ஸ் அனுபவம் என்பது வலி நிறைந்ததாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக வலியை குறைக்கும் அல்லது மரத்துப் போக செய்யும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் செக்ஸ் அனுபவத்தை மாற்றிவிடும். மனதில் தைரியம் இருந்தால் இதை கடந்து செல்ல முடியும். அதை மீறி உங்களிடம் அச்சம் இருந்தால் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, மருத்துவ ரீதியான ஆலோசனைகளை பெறுங்கள். அது உதவிகரமாக இருக்கும்.