இந்த நவீன யுகத்தில் இலைமறை காயாக இருந்த விஷயங்கள் எல்லாமே வயது வரம்பின்றி தற்போது எளிதில் கிடைக்கும் சூழலை காண்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சமூகம் மிக வேகமாக முன்னேறி வரும் போதிலும், உலகின் பல பகுதிகளிலும் செக்ஸ் என்பது ஒரு பரபரப்பான விவகாரமாகவே இருந்து வருகிறது. மனித இனம் பல்கி பெருக காரணமாக இருக்கும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசவோ அல்லது அதை பற்றிய புரிதலை ஏற்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்க செய்யும் நோக்கத்திற்காக தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கவோ அல்லது செக்ஸின் போது சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து நெருங்கிய நண்பர்களுடன் கூட விவாதிக்கவோ பலர் விரும்பவில்லை அல்லது தயாராக இல்லை.
சில நேரங்களில் தங்கள் பாலியல் ஆசைகளை மற்றும் விருப்பங்களை வாழ்க்கை துணையிடம் கூட சிலர் வெளிப்படுத்த தயங்குகின்றனர். இது பெரும்பாலும் மோசமான பாலியல் வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது. எதுவாக இருந்தாலும் செக்ஸை சுற்றியுள்ள எந்த தடைக்கும் முக்கிய காரணமாக இருப்பது கூச்சம். இந்த கூச்சத்தை சமாளிக்க, கடந்து செல்ல சில ஈஸி டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
பகலில் கேளிக்கை : படுக்கையறையில் மட்டுமே செக்ஸ் தொடங்க வேண்டும் என்பதில்லை. உங்கள் பார்ட்னர் மீது உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த உறவின் மீதான செக்ஸ் ஆர்வத்தை விளையாட்டுத்தனமாக அல்லது கேளியாக அவ்வப்போது வெளிப்படுத்துங்கள். உல்லாசமாக இருப்பதையும், படுக்கையில் நீங்கள் விரும்புவதை பெறும் போது நுட்பமாக அறிவுறுத்துவதையும் எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். காதல் குறிப்புகள், ரொமேன்ஸை வெளிப்படுத்தும் டெக்ஸ்ட்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்புவதன் மூலம் உங்கள் பார்ட்னருடன் பகலில் உளவியல் ரீதியாக உணர்ச்சி பெருக்குடன் இருங்கள்.
ஆடை மூலம் : சிலர் தங்களது வாழ்க்கை துணையுடன் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்திருந்தாலும், செக்ஸ் மனநிலையின் போது அதை தனது பார்ட்னரிடம் வாய் விட்டு சொல்ல கூச்சப்பட்டு கொண்டு தயங்கி நிற்பார்கள். பேச்சின் மூலம் செக்ஸ் உணர்வை வெளிப்படுத்த முடியாதவர்கள், தங்கள் துணையை கவர்ந்து இழுக்கும் வகையில் உணர்ச்சியை தூண்டும் ஆடையை அணிந்து கொண்டு பார்ட்னரின் கவனத்தை ஈர்க்கலாம்.
பெட்ரூம் டெக்கரேஷன் : பகல் முழுவதும் உழைத்து விட்டு களைத்து வீடு திரும்பும் பார்ட்னரிடம் செக்ஸ் சம்பந்தப்பட்ட உங்கள் ஆசைகள் மற்றும் தேவைகளை கேட்பது சற்று கடினமான விஷயமே. ஆனால் இதற்கு பார்ட்னரின் மனநிலையை மாற்றுவது பெரிதும் உதவும். உங்கள் பெட்ரூமை மெழுகுவர்த்திகள், மெல்லிசை, பூக்கள் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு ரொமேன்ஸ் ததும்பும் இடமாக மாற்றியமைப்பது உங்கள் இல்லற வாழ்வை இனிப்பாக்கிடும்.
பார்ட்னரை ஹீரோவாக்குங்கள் : பல பெண்கள் செக்ஸில் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்கு கூச்சப்படுவதற்கான முக்கிய காரணம் தங்கள் பார்ட்னரின் உணர்வுகளை புண்படுத்த விரும்பாததே. இருப்பினும் உங்கள் துணை ஏதாவது ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது எவ்வளவு நம்ப முடியாததை அவர் செய்துள்ளார் என்பதை கூறி அவரை பாராட்டுங்கள். உங்கள் ஆலோசனையை அவர் கருத்தில் கொள்ள முடிந்தால் அது இன்னும் நேர்மறையாக இருக்கும். உங்களுக்கு என்ன தேவை அல்லது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அவர் யோசிக்க இது அவருக்கு தூண்டுகோலாக இருக்கும்.
நேரம் ஒதுக்குங்கள்: டிஜிட்டல் உலகில் இன்ஸ்டன்ட் மெசேஜ் சர்வீஸ்கள் உள்ளிட்ட பல ஆப்கான் மற்றும் வீடியோ கால் மூலம் நாம் எங்கிருந்தாலும் சேர்ந்தே இருப்பதை போல உணர முடிகிறது. ஆனாலும் எவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் உங்கள் பார்ட்னரை மதிய அல்லது இரவு உணவிற்கு தவறாமல் பார்ப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் ஒருவருக்கொருவர் தங்கள் பாசம் மற்றும் பாலியல் ஈர்ப்பை வெளிப்படுத்த, முத்தமிட, தொட்டு விளையாட என்று லவ் டேட்டிங்குகளுக்கு அவ்வப்போது நேரம் ஒதுக்குங்கள்.