முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

அலுவலகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை அளிக்க வேண்டும்.

 • 18

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  நம்மில் பெரும்பாலோர் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை அலுவலகத்திலேயே செலவிடுகிறோம். தினசரி எண்ணிக்கையில் கணக்கிடுகையில் கிட்டத்தட்ட நமது வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அலுவலகத்திற்கு அர்ப்பணித்து வேலை செய்து வருகிறோம். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகமானது பாதுகாப்பாகவும், நமக்கு தேவையற்ற மன அழுத்தங்களை கொடுக்காத ஒரு இடமாகவும் இருப்பது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 28

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  ஒரு அலுவலகம் அமைக்கும் போது அதன் அளவைப் பற்றி கவலை கொள்ளாமல், அங்கு பணிபுரிய போகும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், மேலதிகாரிகளை தொடர்பு கொள்ளும் விதிமுறைகள் இதைத்தவிர மற்றும் பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உங்களது அலுவலக பணியாளர்களை மன அழுத்தம் இன்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

  MORE
  GALLERIES

 • 38

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  ஒன்றுக்கு மேற்பட்ட வெளியேறும் வழிகள் : அலுவலகத்தை அமைக்கும் போதே அவசர காலத்தில் பணியாளர்கள் விரைவாக வெளியேறும்படி ஒன்றிற்கும் மேற்பட்ட அவசரகால வழிகளை அமைக்க வேண்டியது அவசியம். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது பணியாளர்கள் பயமின்றி வெகு விரைவாக வெளியேற இது உதவும். மேலும் அவ்வாறு அவசர காலங்களில் பணியாளர்கள் வெளியேறுவதற்கு தேவையான பயிற்சிகளையும் வழங்க வேண்டியது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 48

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  ஆபத்துகளை அகற்றுதல் : அலுவலகத்தில் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கையோடு நடந்து கொள்வது அவசியம். உதாரணத்திற்கு தினசரி எலக்ட்ரிக் ஒயர்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் ஆகியவற்றை சோதனை செய்வது, அலுவலகத்தில் இயங்கும் இயந்திரங்களை சோதனை செய்து அவற்றின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  இதை தவிர பழுதடைந்த இயந்திரங்களை உடனடியாக அலுவலகத்தில் இருந்து நீக்கி அவற்றை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். மேலும் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பதற்கு தேவையான கருவிகள் அனைத்தும் உள்ளதா என்பதை பரிசோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 68

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை : நிறுவனங்கள் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொருட்டு கொள்கைகளை வகுக்க வேண்டும். அவ்வாறு விரும்பதகாத, தொல்லை செய்யும் பணியாளர்களுக்கு உடனடியாக தண்டனை அளித்து ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இதன் மூலம் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பாக உணர்வதோடு மட்டுமல்லாமல் கம்பெனியின் புகழும் மற்றவர்களிடையே அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 78

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் : அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காப்பீட்டு வசதி, உடல்நிலை குறைபாடு ஏற்படும் பட்சத்தில் மருத்துவ வசதி, உடல்நிலை சரியில்லாத நிறங்களில் விடுப்பு அளிப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலம் பணியாளர்கள் தேவையற்ற மன அழுத்தம் இன்றி நிம்மதியுடன் பணியாற்ற முடியும்.

  MORE
  GALLERIES

 • 88

  பணியாளர்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்.!

  பாதுகாப்பு விழிப்புணர்வு குழு : அலுவலகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவை அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏதேனும் விபத்து அல்லது பணியாளர்களிடமிருந்து புகார் ஏதேனும் வரும் பட்சத்தில் அவற்றை ஆராய்ந்து பிரச்சனையில் நுனி வேரை கண்டறிந்து, அதனை நிர்வாகத்திற்கு தெரிவித்து சரியான முடிவு எடுக்கும் திறன் வாய்ந்த குழுவை உருவாக்க வேண்டும். மேலும் பாரபட்சம் பார்க்காதவர்களாகவும், ரகசியங்களை காப்பவர்களாகவும் இந்த குழு இருப்பது அவசியம்.

  MORE
  GALLERIES