காதலர் தினம் கொண்டாடுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று போல மாறிவிட்டது. கட்டாயமாக ஏதாவது புதிதாக செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் இருப்பது ஒரு சிலருக்கு படபடப்பை ஏற்படுத்தலாம். சிலருக்கு இதெல்லாம் கை வந்த கலை போல நாளை ஸ்பெஷலாக மாற்றிவிடுவார்கள். ஆனால், பலருக்கும் குறிப்பாக புதிதாக காதலிப்பவர்கள், திருமணமானவர்களுக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கும். அதை போன்றவர்களுக்காக, காதலர் தினத்தை எவ்வளவு ஸ்பெஷலாக, நேர்த்தியாக கொண்டாடலாம் என்பதற்கான டிப்ஸ்.
உங்கள் பார்ட்னருடன் டிஸ்கஸ் செய்யுங்கள். உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் பார்ட்னரின் விருப்பம் அறிந்து, அதை இருவரும் பின்பற்றலாம். சிலர் காதலர் தின கொண்டாட்டத்தை வணிகங்களில் வியூகம் என்று சொல்லி, மிகவும் பிரைவேட்டாக கொண்டாட விரும்புவார்கள். உங்கள் இருவரின் விருப்பமும் நிறைவேறும் வகையில் கொண்டாடலாம்.
பெரிய எதிர்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். காதலர் தினம் பெரிய வணிகத்துக்கான கொண்டாட்டமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே போல, காதலன் / காதலியை இம்ப்ரஸ் செய்ய பெரிய பெரிய, புதிதான, கிரியேட்டிவ்வான, ஆடம்பர பொருட்களை பரிசாகக் கொடுப்பது,அசத்துவது என்றெல்லாம் பழக்கத்தில் உள்ளன. எனவே, அந்த அடிப்படையில் பெரிய விஷயங்களை மனதில் எதிர்பார்ப்பாக வைத்துக் கொள்ளாதீர்கள். காதலர் தினத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம்.
காதலுக்காக நண்பர்களை ஒதுக்கி விடாதீர்கள். புதிதாக காதலிப்பவர்கள், காதலுக்கு நேரம் செலவழிக்க வேண்டும், அதே நேரத்தில் நண்பர்களை முழுவதுமாக ஒதுக்கி விடாதீர்கள்.