பெரும்பாலும் முதல் டேட்டிங் என்பது பதட்ட உணர்வை தர கூடிய நிகழ்வாகும். மனதுக்கு பிடித்த ஒருவருடன் முதல் முறையாக டேட்டிங் செல்லும்போது பல்வேறு விதமான எண்ண அலைகள் உருவாகும். மேலும், இவை நமக்கு பல விதமாக சிந்திக்க வைக்கும்.எனவே, டேட்டிங் செல்வோருக்கு பதட்டம் இல்லாமல் சிறந்த டேட்டிங் அனுபவத்தை பெற, சில குறிப்புகள் இங்கே. அவற்றை இந்தப் பதிவில் விரிவாக இனி பார்க்கலாம்.
நிராகரிப்பு பற்றிய யோசனை : டேட்டிங் செல்லும்போது, அந்த நபரை பார்த்த பிறகு உங்களை அவர் நிராகரித்து விடுவாரோ என்கிற எண்ணம் அதிக பேருக்கு உண்டாகும். ஆனால், எல்லோரும் முதல் டேட்டிங்கிலேயே உங்களை நிராகரிக்க போவதில்லை. எனவே, முதலில் நீங்கள் அந்த நபரிடம் மனம் விட்டு பேச தொடங்குங்கள். அப்போது தான் உங்களை குறித்து அவருக்கு ஒரு எண்ணம் உண்டாகும். உங்களின் பதட்டமே அவருக்கு உங்கள் மீதான எண்ணத்தை குறைத்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, அதிகம் யோசிக்காதீர்கள்.
டேட்டிங் நேரம் : முதலில், உங்கள் டேட்டிங்கிற்கு நீங்கள் சரியான நேரத்தில் செல்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், சரியான நேரத்தில் இருப்பது உங்களின் மீது நல்ல விதமான முதல் அபிப்ராயத்தைப் பெற உதவுகிறது. நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை அந்த நபருக்கு உணரவும் இது வழி செய்கிறது. எனவே, பதட்டம் இல்லாமல் நேரத்திற்கு செல்லுங்கள்.
உடைகள் : நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய அடுத்த விஷயம் என்னவென்றால், நீங்கள் அணியும் ஆடைகளுடன் வசதியாக இருக்க வேண்டும். நீங்கள் நவநாகரீக ஃபேஷனை முயற்சிப்பதற்கு உங்களின் முதல் டேட்டிங் சரியான சந்தர்ப்பம் அல்ல. நீங்கள் ஏற்கனேவே டேட்டிங் பற்றி பதட்டமாக இருக்கிறீர்கள்என்றால், உங்கள் காலணிகள் அல்லது உடையை பற்றி உங்கள் கவலையை அதிகரிக்க வேண்டியதில்லை.
உரையாடல் : முதல் முறை டேட்டிங்கில் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்வது முக்கியம். எனவே, நீங்கள் ஒரு நல்ல உரையாடலுக்கு தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் அந்த நபரை பற்றியும் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பொது கவனம் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பலவற்றைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம் ஆனால் அவற்றையெல்லாம் உங்கள் முதல் டேட்டிங்கில் வெளிப்படுத்த வேண்டியது அல்ல. எனவே, நீங்கள் யார் என்பதைப் பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சொன்னால் போதும்.
கடந்தகால உறவுகள் : நீங்கள் உங்களின் உரையாடலைத் தொடங்கும்போது மிகவும் முக்கியமான மற்றொரு விஷயம், உங்கள் கடந்தகால உறவுகளைத் தவிர்ப்பது. கடந்த கால உறவுகள் குறித்து மூன்றாவது அல்லது நான்காவது டேட்டிங்கில் விவாதித்து கொள்ளலாம். உங்கள் முதல் டேட்டிங்கில் அதைப் பற்றி விவாதிப்பது, உங்கள் கடந்த காலத்தில் நீங்கள் இன்னும் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்று அந்த நபருக்கு தோன்றலாம்.