வாழ்க்கையில் முதல் முறையாக புதிதாக ஒன்றைச் செய்யும் போது, உற்சாகத்தோடு, தயக்கமும் பயமும் ஏற்படும்.நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொள்ளப்போகிறீர்கள் என்ற சூழலில், நீங்கள் மிக மிக பதட்டமாகவும், நடுக்கமாகவும் உணர்ந்தால், (ஆம், நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள்), கவலைப்பட வேண்டாம். பதட்டம் உங்களுக்கு மட்டும் ஏற்படுவதல்ல.
முதல் முறையாக உடலுறவு என்னும் போதே ஏற்படும் ஒரு விதமான பாலியல் அழுத்தம் உண்மையானது. சில பெண்கள் தங்கள் பார்ட்னருடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் மிகவும் உற்சாகமடைகிறார்கள். ஆனால், மறுபுறம், உடலுறவில் முதல் முறையாக வலியை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பயந்திருக்கும் பல பெண்களும் உள்ளனர்.
இது அதிகப்படியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உணர்வு பொதுவானது மற்றும் தவிர்க்க முடியாதது என்றாலும், அழகான, நெருக்கமான அனுபவத்தை அனுபவிக்க, உங்கள் பதட்டத்தையும் அழுத்தத்தையும் நீக்க வேண்டும்.உங்கள் மிகவும் தேவையான நேரத்தில், உதவியாக, முதல் முறையாக உடலுறவு என்னும் போது எழும் மன-அழுத்தம் மற்றும் அதீத பதட்டத்தை நீக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன.
லூப்ரிகேஷன் முக்கியம் : லுப்ரிகேஷன் என்பது உங்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் நெகிழ்வுத்தன்மை. நீங்கள் உடலுறவுக்கு முன் நிறைய ஃபோர்ப்ளேவில் ஈடுபட்டால், அதன் மூலம் இயற்கையாக உடலில் லுப்ரிகேஷன் சுரக்கும். இல்லையென்றால், வலியைக் குறைக்க உதவும் நீர் அடிப்படையிலான லுப்ரிகேஷன் தயாரிப்பை வாங்கலாம். ஒவ்வொரு முறையும் உங்கள் நீங்கள் உடலுறவு கொள்ளும்போது லுப்ரிகேஷன் முக்கியம் தான். ஆனால் முதன் முறை உடலுறவு என்றால், லுப்ரிகேஷன் மிகவும் அவசியம். இது உடலுறவை எளிதாக்குகிறது மற்றும் முதல் முறையாக ஆணுறுப்பை எதிர்கொள்ளும் போது ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. ஆணுறைகள் மீது பிசுபிசுப்பான க்ரீஸ் போன்ற கோட்டிங் பூசப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
வலியை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : இதைச் சொல்வதை தவிர வேறு வழியில்லை, அதே நேரத்தில் சொல்லாமல் இருக்க முடியாது. நீங்கள் முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படும். முதல் முறை நீங்கள் உடலுறவு கொள்வதால், பாலியல் நுட்பங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். வலியைத் தவிர்க்க முடியாது, ஆனால் நீங்கள் தயாராக இருந்தால் ஓரளவுக்கு எளிதாக எதிர்கொள்ள முடியும்.அதாவது, உடலுறவின் போது ஒருவித முதல் முறை வலியை உணர மனதளவில் உங்களை தயார்படுத்துங்கள். ஆனால் இதையே நினைத்துக் கொண்டு, உங்கள் மகிழ்ச்சியான மன நிலையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் கன்னித்திரை கிழியும் போது, ரத்தம் வரலாம்: ஹைமன் எனப்படும் கன்னித்திரை, பொதுவாக முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, கன்னித்திரை கிழிந்து, ரத்தம் வரும் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் வலம் வருகின்றன. ஆனால், முக்கியமாக, இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபாடும் என்பதை உணர வேண்டும். முதல் முறை உடலுறவு மற்றும் கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருதல் என்பது அனைவருக்கும் ஏற்படாது. ஒரு சில பெண்களுக்கு, அதைப் போன்ற எந்த உணர்வும் ஏற்படாது. முதல்முறையாக உடலுறவில் ஈடுபடும் போதும், அவர்கள் நினைப்பது போல் இரத்தம் வராது.
மேலும், கன்னித்திரை கிழியா விட்டாலும், உங்கள் முதல் முறையான உடலுறவின் போது, கொஞ்சம் இரத்தம் வரலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு, முதன் முறை உடலுறவு கொள்வதற்கு மன்பே கன்னித்திரை கிழிந்திருக்கும். விளையாட்டு, தீவிரமான உடற்பயிற்சி, நடனம் மற்றும் சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு, உடலுறவுக்கு முன்பே கன்னித்திரை கிழியும் வாய்ப்புள்ளது. எனவே, முதல் முறை உடலுறவு என்பதால், இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
முதல் ஆர்காசம் (orgasm) : உங்கள் துணையுடன், முதல் முறையாக உடலுறவின் போது நல்ல அனுபவத்தை, முதல் ஆர்காசத்தை பெற நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், கசப்பான உண்மையாக, நீங்கள் ஆர்காசம் அடைவதற்கான, முழுமையான செக்ஸ் அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, அதிக அளவிலான எதிர்பார்ப்புகளைத் தவிர்க்கலாம்.
சில நாட்களுக்கு தொடரும் இரத்தப்போக்கு: உங்கள் முதல் முறை உடலுறவுக்குப் பிறகு சில நாட்களுக்கு நீங்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, பீதி அடையக் கூடாது. ஒரு பாலியல் நிபுணரிடம் அதற்காக பேசுங்கள். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது கொஞ்சமாக ரத்தம் வெளியேறினால் பயப்பட வேண்டாம். அதே போல, உங்கள் உள்ளாடைகளில் குறைந்த அளவில் இரத்தம் வெளியேறிய கறை இருந்தாலும், அது இயல்பானதே. இந்த இரண்டைத் தவிர்த்து, தொடர்ச்சியான இரத்தப்போக்கு அல்லது அதிக அளவில் இரத்தம் வெளியேறினால், நீங்கள் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.