எவ்வளவு தான் நாகரிகமும் தொழில்நுட்பமும் முன்னேறினாலும் இன்றும் பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ஆண்களை குழப்பிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஒரு பெண்ணின் மனதை கவர்வது எப்படி என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனைகளை கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெண்களின் மனதை கவர்வதற்கு மிகப்பெரிய ராஜதந்திரங்கள் ஏதும் தேவையில்லை. இந்த பதிவில் குறிப்பிடப் போகும் சில எளிமையான விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
ஆர்வம் : நீங்கள் ஒரு பெண்ணிடம் பழகும் போது நீங்கள் உண்மையாகவே அவர் மீது ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் பேசும் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதும், அவர்களைப் பற்றி கேள்விகள் எழுப்புவதும் உங்களுக்கு அவர்கள் மீது ஆர்வம் உள்ளது என்பதை அவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தும்.
ரொமான்ஸ் : அனைத்து பெண்களுக்கும் ரொமான்டிக்காக இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்றுதான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது, கேண்டில் லைட் டின்னருக்கு அழைத்துச் செல்வது ஆகியவற்றை செய்வதன் மூலம் பெண்களின் மனதை கொள்ளை அடிக்க முடியும். அந்தப் பெண்ணுக்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள் எனும் நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
கனிவாக இருப்பது : எப்போதுமே ஆணாதிக்க மன நிலையில் இல்லாமல் மற்றவர்களிடம் இரக்கமாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளும் ஆண்மகனை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். உதாரணத்திற்கு அவர்களுக்காக கதவுகளை திறந்து விடுவது, அவர்களின் பைகளை சுமந்து வருவது போன்ற சிறு சிறு விஷயங்கள் உங்கள் மீது உள்ள காதலே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்யும்.