கணவன், மனைவிக்கு இடையே அன்பு, பிணைப்பு, நம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் விஷயங்களில் ஒன்றாக உடலுறவும் உள்ளது. தாம்பத்யம் செழிப்பதே இணையர்களுக்குள் உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும் விஷயமாகும். உடலுறவு என்பதை வெறும் குழந்தை பேறுக்காகவோ, கட்டாயத்திற்காகவோ செய்யாமல் இருவரும் மனம் ஒத்து செய்ய வேண்டும். அப்படி உடலுறவு கொள்ளும் போது, உறவுக்கு முன்னும் பின்னும் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இது மனநிலையை கெடுக்கும், உங்கள் செயல்திறனை பாதிக்கும் மற்றும் செக்ஸ் வாழ்க்கையில் ஒரு கசப்பான அனுபவமாக மாறிவிடும். எனவே நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 6 விஷயங்களை இங்கே அறிந்துகொள்ளலாம்...
குடிபோதையில் இருக்கக்கூடாது : மது போதை சில சமயங்களில் காம உணர்வை தூண்டலாம், எனவே சில உடலுறவுக்கு முன்னதாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறிதளவு என ஆரம்பித்து, உறவுக்காக கட்டிலுக்குச் செல்லும் முன்பு முழு பாட்டிலையும் குடித்துவிட்டு செல்வது என்பது மிகவும் தவறானது. குடிபோதையில் உறவு கொள்வது பலருக்கு உச்சகட்டத்தை அடைய முடியாமலும், உறவில் திருப்தி இல்லாத நிலையையும் உருவாக்கும்.
குளியல் அறை ரகசியம்: உடலுறவுக்கு முன்பு சுத்தமான குளியல் நல்லது. ஒருவேளை உங்கள் துணைக்கு ஓரல் செக்ஸில் விருப்பம் அதிகம் என்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம். குறிப்பாக ஆண்களின் அந்தரங்க உறுப்பின் முன் தோலில், UTI எனப்படும் சிறுநீர் பாதை நோய் தொற்றை உருவாக்க கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே உறவுக்கு முந்தைய குளியலின் போது, உறுப்பின் முன் தோலை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹெவியான டின்னர் வேண்டாம் : ஆரோக்கியமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது தான் என்றாலும், உடலுறவுக்கு முன்பு மட்டும் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை வாயுவை உண்டாக்கி படுக்கையில் சிக்கலைத் தரலாம். குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு முன் அதிக நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். வேண்டுமென்றால் உறவுக்கு முன்பு ஒரு சிறிய துண்டு சாக்லேட்டை சாப்பிடலாம், அது செரோடோனின் அளவை அதிகரிக்க உதவும்.
செக்ஸ் டாய்ஸ்களை சுத்தப்படுத்துதல் : செக்ஸ் டாய்ஸை பார்ட்னருடன் இணைந்தும் பயன்படுத்தும் போது, உங்கள் செக்ஸ் தருணம் கூடுதல் சுவாரஸ்யமாகும். எனவே பாலூறவின் போது செக்ஸ் டாய்ஸ்களை பயன்படுத்த நினைக்கிறீர்கள் என்றால், அவற்றை நன்றாக கழுவி, உலர்த்தி சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அதில் பரவி இருக்கும் நுண்ணுயிரிகளால் கடுமையான தொற்று நோய்க்கு ஆளாகலாம்.