முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

கொட்டிய பாலை திரும்ப அள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, பிரிவதற்கு முன்பு ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும்.

  • 113

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    திருமண வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பானது தான். சின்ன, சின்ன சண்டைகளும் கடந்து போகும். ஆனால், உள்ளார்ந்த புரிதலோடு என்றென்றும் ஒற்றுமையாக இருப்பதுதான் மகிழ்ச்சிக்கான அடிப்படையாகும். இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் உங்கள் பார்ட்னரை விட்டு விலகுவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டாலும் கூட, அவசர கதியில் முடிவெடுத்துவிடக் கூடாது.

    MORE
    GALLERIES

  • 213

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    கொட்டிய பாலை திரும்ப அள்ள முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, பிரிவதற்கு முன்பு ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். உங்கள் கோபம், கவலை நியாயமானதாக இருந்தாலும் அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளை தேடலாம். அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னர்தான் விவாகரத்து என்ற முடிவை எடுக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 313

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    உறுதியாக இருக்கிறீர்களா? ஆம், நம் மனமிடமே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இது. ஏனென்றால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பிரிந்து விட்டு, பின்னர் தவறான முடிவெடுத்துவிட்டதாக வருந்தக் கூடாது. ஆகவே, உங்கள் முடிவு சரியானதா, பிரிவு தேவைதானா என்பதை நன்கு யோசித்து பரிசீலனை செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 413

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    கவலைகளை வெளிப்படுத்துங்கள் : கவலைகளை கொட்டித் தீர்த்து விட்டால் மனதில் உள்ள பாரங்கள் குறையும். உங்கள் மனம் குறித்து பார்ட்னருக்கு தெரிய வரும். உங்கள் பிரச்சினைகளை உள்வாங்கி, அதற்கு அவர்கள் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை தேடவும்.

    MORE
    GALLERIES

  • 513

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    அறிவுரை கேளுங்கள் : விலகுதல் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் முன்பாக உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனை செய்யவும். இவ்வளவு ஏன், உங்கள் பார்ட்னரிடமே அதுகுறித்து விவாதிக்கலாம். பரஸ்பர சம்மதம் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    MORE
    GALLERIES

  • 613

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    மனநல ஆலோசகரை அணுகலாம் : வாழ்க்கையின் துயர் மிகுந்த சூழலில் நம் மனம் குழப்ப நிலையில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆகவே, இதுகுறித்து மனநல ஆலோசகரிடம் ஆலோசனை செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 713

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    பொறுப்பேற்கவும் : திருமண பந்தத்தில் நடக்கின்ற பிரச்சினைகள் மற்றும் உங்கள் நடவடிக்கைகளுக்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்கவும். எல்லா விஷயத்திலும் பழியை பார்ட்னர் மீது தூக்கிப்போட்டுவிட்டு ஒதுங்கிச் செல்ல முடியாது.

    MORE
    GALLERIES

  • 813

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    காரணங்களை பட்டியலிடவும் : உங்களுக்கு விவகாரத்து ஏன் தேவைப்படுகிறது என்ற காரணங்களை பட்டியலிடவும். ஏனென்றால் அப்போதுதான் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். நீங்கள் சீரியஸாக கருதும் பல விஷயங்கள் இயல்பானதாக இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 913

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    பார்ட்னருடன் உரையாடவும் : உங்கள் பிரச்சினைகள் குறித்து பார்ட்னருடன் ஆலோசனை செய்ய சரியான நேரம், தருணம் ஆகியவற்றை முடிவு செய்யவும். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1013

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    பொதுவெளியில் சண்டை வேண்டாம் : பார்ட்னரை பிரிவது என்று முடிவெடுத்துவிட்டால் பொதுவெளியில் சண்டையிட கூடாது. குறிப்பாக சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் மூலமாக செய்தி அனுப்பக் கூடாது. பின்னர் மீண்டும் சேர வேண்டும் என்றால் இவையெல்லாம் தடையாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 1113

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    எதிர்வினையை ஏற்கவும் : பிரச்சினை குறித்து விவாதிக்கும்போது உங்கள் பார்ட்னர் மனதிலும் கோபம், கவலைகள் எல்லாம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவற்றை பரிசீலனை செய்யவும், முடிந்தால் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 1213

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    நேரம் கொடுக்கவும் : உங்கள் கவலைகள் மற்றும் உணர்வுகளை உங்கள் பார்ட்னரிடம் தெரிவித்த பின்னர், அவற்றை அவர்கள் புரிந்து கொண்டு தீர்வு அளிப்பதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். உடனுக்குடன் அதிசயங்கள் நிகழ்ந்துவிடாது.

    MORE
    GALLERIES

  • 1313

    Divorce அப்ளை செய்ய திட்டமிடுகிறீர்களா..? அதற்கு முன் இதையெல்லாம் யோசித்துக்கொள்ளுங்கள்..!

    புதிய பந்தம் வேண்டாம் : திருமண வாழ்க்கையில் இருந்து சட்டப்பூர்வமாக விலகும் தருணம் வரை பொறுமை அவசியம். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் இரு தரப்பிலும் தவறுகளை உணர்ந்து ஒன்றுசேர வாய்ப்பு உண்டு. அதற்கு முன்னதாக புதிய பந்தத்தில் இணைய வேண்டாம்.

    MORE
    GALLERIES