தொன்றுதொட்டே ஆண்களுக்கு புதிராக இருந்து வரும் மிகப்பெரும் விஷயமே பெண்களின் மனதை பற்றி அறிந்து கொள்வது தான். உலகில் எதையெதையோ கண்டுவிட்ட மனிதனால் எதிர்பாளினத்தவரான பெண்ணின் மனதை பற்றி மட்டும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே அவர்களைப் பற்றி கொள்வதில் அனைத்து ஆண்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் பெண்களின் மனதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பெண்கள் பொதுவாகவே தங்கள் மனம் கவர்ந்த ஆண் மகனிடம் மட்டும் சில குணாதிசயங்களை வெளிப்படுத்துவார்கள். அவை சில சமயங்களில் நபருக்கு நபர் வேறுபட்டாலும் பெரும்பாலான நேரங்களில் அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாகவே இருந்து வருகிறது. அவற்றை வைத்து அந்த பெண்ணிற்கு ஆண் மகனின் மீது ஈர்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தங்களை ஒப்படைத்து விடுவார்கள்: பொதுவாகவே பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த ஆண்களிடம் தங்களைப் பற்றிய பலம் பலவீனம் என அனைத்தையும் வெளிப்படையாக கூறி விடுவார்கள். அவர்களுக்கு இருக்கும் பயம், பாதுகாப்பு குறைபாடுகள், சந்தேகங்கள் என அனைத்தையுமே அந்த ஆண் என்ன நினைப்பான் என்பதை பற்றி கவலை கொள்ளாமல் வெளிப்படையாக கூறுவார்கள். இவ்வாறு வெளிப்படையாக இருப்பதே அந்த பெண்ணிற்கு உங்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளது என்பதற்கான மிகப்பெரும் அறிகுறி ஆகும்.
நேரம் செலவிட விரும்புவார்கள்: தங்கள் மனம் கவர்ந்த ஆண் மகனோடு அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். டேட்டிங் செல்வது, திரையரங்குகளுக்கு செல்வது அல்லது வெறுமனே அவருக்கு அருகில் இருந்து அவரது இருப்பை ரசிப்பது போன்ற செயல்களை அதிகம் விரும்புவார்கள். உறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாகவும் மிக பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
உடல் ரீதியான நெருக்கம்: பெண்கள் எப்போதுமே அவர்களின் மனதுக்கு பிடித்த ஆண்களுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க விரும்புவார்கள். அடிக்கடி உரசுவது, தொடுவது, அந்த ஆண் மகனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது ஆகியவை அவர்கள் அந்த ஆணை விரும்புகிறார்கள் என்பதற்கான முக்கியமான அறிகுறி ஆகும். கைகளைப் பிடித்துக் கொள்வது கட்டிப்பிடிப்பது போன்றவை அதிக பாசத்திற்கான வெளிப்பாடுகள் ஆகும்.
உறுதுணையாக இருப்பது: பெண்கள் எப்போதுமே தங்கள் மனதிற்கு பிடித்த ஆண் துவண்டு போகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு பக்கபலமாக இருக்க விரும்புவார்கள். அவனது கடினமான கால கட்டங்களில் அவனுக்கு என்ன நடந்தது என்பதை கேட்டு அறிந்து உறுதுணையாக நின்று தன்னுடைய வார்த்தைகளின் மூலம் ஊக்கப்படுத்தி அந்த ஆணை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் கடினமான காலகட்டங்களில் உறுதுணையாக நிற்பது இருவருக்கும் உள்ள காதலை அதிகரிக்கும்.
மனம் கவர்ந்த ஆணிற்கு பிடித்த செயல்களை செய்வது: தங்கள் விரும்பும் ஆண்மகனுக்கு என்ன விஷயங்களை எல்லாம் செய்ய பிடிக்குமோ அவற்றையெல்லாம் தாங்களும் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அவை புதிய பழக்கவழக்கங்களாக இருக்கலாம் புதிய செயல்களாக இருக்கலாம் அல்லது கடந்த கால நிகழ்வுகளாக கூட இருக்கலாம். இவற்றின் மூலம் தங்களுக்குள் உள்ள உறவை பலப்படுத்தி மற்றவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.