உறவுகள் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய மற்றும் விலைமதிப்பற்ற சொத்துக்கள். இவற்றை நாம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பு என்பது சவாலான விஷயம். குறிப்பாக உறவுகளுக்கு இடையே மனக்கசப்பு எப்படி ஏற்படுகிறது? எவ்வாறு ஏற்படுகிறது? என்று அடையாளம் காண்பது கடினமாக இருந்தாலும் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இரண்டு நபர்களை இணைக்கும் அடிப்படை உறவுகளை நிச்சயம் பாதிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் அர்ப்பணிப்புள்ள தம்பதிகள் கூட தங்களது உறவில் வெறுப்பை அடைகிறார்கள். நாளாக நாளாகந நல்ல உறவைக்கூட இழக்கும் சூழலும் ஏற்படுகிறது.
நீங்கள் உங்களது உறவுகளை நல்ல முறையில் கையாள வேண்டும் என்றாலும், முதலில் நீங்கள் சில விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்கிறார் குடும்பம் மற்றும் திருமண உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் எலிசபெத் எர்ன்ஷா. குறிப்பாக நினைவூட்டல், சில விஷயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளுதல் போன்றவற்றை நீங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்கிறார். இவை என்னென்ன என்பது குறித்து நாமும் இங்கே அறிந்துக் கொள்வோம்.
நினைவூட்டல் : வாழ்க்கையில் உறவுகளை நீங்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தொடர வேண்டும் என்றால் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமான ஒன்று. குறிப்பாக உங்களது மனைவிக்கோ? அல்லது கணவருக்கோ? ஏதேனும் முக்கிய வேலைகள் இருந்தால் அந்த நாளில் இன்று உங்களுக்கான முக்கியமான நாள் என்று மறக்காமல் இதை செய்துவிடுங்கள் என்று சொல்ல பழகுங்கள். நீங்களும் அதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. இது கணவருக்கும் பொருந்தும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் குறிப்பிட்ட வேலைகளை செய்யாமல் மறந்து விடுவதன் மூலமும், உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஆராய்ந்து செயல்படுதல் : உறவுகள் என்றாலே சந்தோஷமும், சில நேரங்களில் சலசலப்பும் ஏற்படும் வழக்கம். வாழ்க்கையில் தேவையில்லாத சண்டை வந்தால், அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்? என்பது தான் முக்கியமான விஷயம். இல்லையென்றால் முன்னதாக ஏன் இந்த பிரச்சனைகள் வருகிறது என்று ஆராய்ந்துக் கொள்வதோடு அவற்றை நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம்..