உறவு என்பது நம் வாழ்வில் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு புதிய உறவை நம்முடைய வாழ்வில் இணைத்துக்கொள்கிறோம் என்றால் அதற்கு உறுதுணையாக உள்ளது வாக்குறுதிகள் தான்.எந்தளவிற்கு நம்முடைய உறவுகளிடம் பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வாழ்வில் இன்பத்தை நாம் அடைய முடியும். சில நேரங்களில் இந்த உணர்வுகள் காலப்போக்கில் மாறக்கூடும். அதுவும் நீண்ட தூரத்தில் இருக்கும் போது இந்த வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்ற பல கேள்விகள் சில நேரங்களில் ஏற்படும். மேலும் வாழ்க்கையில் அதிருப்தியும் ஏற்படும். கொஞ்சம் தவறுதலாக உங்களது மனநிலை மாறும் இந்த நேரத்தில் நீங்கள் உங்களது பார்ட்னரிடம் நிச்சயம் நீங்கள் பேச வேண்டும்.
இதோடு மட்டுமின்றி கணவன் – மனைவி இருவரும் வெகுதூரத்தில் இருக்கும் சூழல் ஏற்பட்டால் நம்முடைய உறவை நாம் தொலைத்துவிட்டோம் என்ற அச்சம் நமக்கு ஏற்படும் என்றும், சில நேரங்களில் துரோகம் செய்யும் அளவிற்குக் கூட நமது மனநிலை மாறக்கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். மேலும் தொலைத்தூரத்தில் இருந்து நீங்கள் மேற்கொள்ளும் துரோகம் உங்களது உறவில் பிரிவை ஏற்படுத்தும்.
நீண்ட தூர உறவுகள் எப்போதும் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருமடங்கு அதிகமாக இருக்கும். உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தூரம் உங்களது பாட்னர்களிடையே நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். இதுகுறித்து சமீபத்தில் திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் செயலியான Gleeden, சுமார் 1,500 இந்திய மக்களிடம் ஆய்வு நடத்தியது. இதில் 54% ஆண்கள் மற்றும் 56% பெண்கள் உட்பட 55% இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வின் படி, இந்தியர்கள் தங்களது திருமணத்தை ஒரு ஜாலிக்காக செய்கிறார்கள் என்றும், புதியவர்களைக் கண்டுபிடித்துவிட்டால் விவகாரத்து விண்ணப்பிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக உறவுகளுக்கிடையே நெருக்கம், கவனம், காதல் போன்றவை எப்போதும் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே உங்களது உறவில் நீங்கள் எந்த பிரச்சனையும் இன்றி வாழ முடியும். மேலும் நம்முடைய உறவு நம்மை விட்டு தொலைந்துவிடுமோ? என்ற அச்சம் இனி தேவையில்லை.