முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

ஒரு சிலர் நம்முடனே இருந்து கொண்டு நமக்கு துரோகம் செய்யும் போது தான் நமக்கு அதிகமாக வலிக்கும். அப்படியான ஒரு சில துரோகங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

 • 110

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  காதல் என்ற அழகான உணர்வு கிட்டத்தட்ட ஒரு குழந்தை போல தான். சிறு வயதில் நம்முடன் ஆசை ஆசையாய் இருந்து, நம்மை சிரிக்க வைத்த குழந்தை, வளர வளர அந்த அட்டாச்மெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் பாருங்க... அதே மாதிரி தான் காதலும். இந்த பதிவில் காதல் மற்றும் திருமண பந்தத்தில் உள்ள 8 விதமான துரோகம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

  MORE
  GALLERIES

 • 210

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  ஒரு சிலர் 'எனக்கும் உனக்கும் செட் ஆகாது' என்று சொல்லி பிரிந்துவிடுவார்கள். இன்னும் சிலர் சொல்லாமலேயே பிரிந்து சென்று விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் நம்முடனே இருந்து கொண்டு நமக்கு துரோகம் செய்யும் போது தான் நமக்கு அதிகமாக வலிக்கும். அப்படியான ஒரு சில துரோகங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 310

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  உடல் ரீதியான கள்ள உறவு : இந்த வகையான கள்ளத்தொடர்பில் கணவர்/மனைவி அல்லது காதலர்/காதலிக்கோ தெரியாமல் வேறொருவருடன் உடலுறவில் ஈடுபடுவார். இதில் முத்தமிடுதல் முதல் உடலுறவு வரையிலான தொடர்பை கொண்டிருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 410

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  உணர்வு சார்ந்த கள்ள உறவு : கமிட் செய்த பார்ட்னரை ஏமாற்றி வேறொரு நபருடன் விஷயங்களை பகிர்தல், ஆறுதல் தேடுதல் போன்ற ஆழமான உணர்வு சார்ந்த உறவில் ஈடுபடுதல்.

  MORE
  GALLERIES

 • 510

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  ஆன்லைனில் கள்ள உறவு : செக்ஸ்டிங், பாலுறவு சார்ந்த மெசேஜ்கள் அல்லது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக வேறொரு நபருடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் போன்றவை இதில் அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 610

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  மைக்ரோ-சீட்டிங் : கமிட் ஆன நபரின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் விதமாக பிறரை பார்த்து வழிவது, அவருக்கு தெரியாமல் ரகசியமாக பிறரை சந்திப்பது, வேறொருவருடன் உணர்வுப்பூர்வமான உறவில் ஈடுபடுவது போன்றவை மைக்ரோ-சீட்டிங் என வகைப்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 710

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  அனுபவம் சார்ந்த துரோகம் : கமிட் ஆன பார்ட்னரை விட்டுவிட்டு வேறொருவருடன் டேட்டிங், வெக்கேஷன், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற தனக்கான நேரத்தை செலவிடுதல் ஆகியவை அனுபவம் சார்ந்த துரோகமாக கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 810

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  பொருளாதாரம் சார்ந்த துரோகம் : பார்ட்னருக்கு தெரியாமல் ரகசியமாக வேறொரு வங்கி கணக்கு வைத்துக் கொள்ளுதல், பணத்தை செலவு செய்தல், கடன் வாங்குதல் போன்றவையும் ஒரு வித துரோகமாகவே கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 910

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  மனதளவில் துரோகம் செய்தல் : நம்பிக்கைக்குரிய துணையைத் தவிர வேறொரு நபரைப் பற்றி ஆழமான உணர்வுப்பூர்வ யோசனைகள் அல்லது உடலுறவு பற்றிய மனக்கோட்டை கட்டி வைத்தல் போன்றவையும் ஒரு வித துரோகம் தான்.

  MORE
  GALLERIES

 • 1010

  திருமண உறவில் இதுவும் துரோகம்தான்.. இப்படியெல்லாம் செய்தால் இன்றே தவிர்த்துடுங்கள்..!

  அலட்சியம் செய்தல் :கமிட்டான பார்ட்னருடன் எந்த வித உணர்வு சார்ந்த, உடல் ரீதியான உறவில் ஈடுபட விரும்பாமல் அவரை புறக்கணிப்பது. மேலும் அவருக்கு தேவையான நேரம், அன்பு போன்றவற்றை தர மறுப்பது ஆகியவை இந்த துரோகத்தின் கீழ் அடங்கும்.

  MORE
  GALLERIES