அதிர்ஷ்டவசமாக சில தம்பதிகள் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் தரித்துவிடுவார்கள். சிலருக்கு மாதங்கள் ஆகலாம்..ஏன் வருடங்கள் கூட ஆகலாம். இன்று பலருடைய பிரச்னையும் அதுதான். அதற்காக துவண்டு போய் உடனே மருத்துவரை நாடாமல் சில முயற்சிகளை தம்பதிகளே செய்து பார்ப்பது நல்லது. கரு நிற்க உடலுறவு வைத்துக்கொண்டாலே போதுமானது என்றாலும் அதை எத்தனை முறை செய்ய வேண்டும்..? எப்போது செய்ய வேண்டும்..? எந்த பொசிஷனில் செய்ய வேண்டும்? என்றெல்லாம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் இருக்கின்றன. அதன்படி செய்தால் அவர்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் உண்டு.
அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது உடலுறவு கொள்வது ஒரு வேலைப்போல் ஆகிவிட்டது என்று கருத்து கூறியுள்ளனர். 43 சதவிகித மக்கள் கருத்தரிக்க முடியவில்லையே என பெரும் அழுத்தமாக உணர்ந்ததாகவும்..இனி குழந்தையே பிறக்காதோ என்ற பயமும் தோன்றியதாக கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கருத்தரிப்பது கடின உழைப்பாகவும் மன அழுத்தமாகவும் தோன்றியதாக கூறியுள்ளனர்.
உண்மை என்னவெனில் அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடும். குழந்தை வேண்டும் என முயற்சி செய்யும் தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்வதால் பலன் பெறலாம். அப்படி முயற்சித்த தம்பதிகளுக்கும் கருத்தரித்தல் விகிதம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அண்டவிடுப்பின் பொதுவான காலம் 28 நாட்களாகும். அதாவது மாதவிடாய் சுழற்சி முடிந்து 14 வது நாள் இது நிகழும். இது மாதவிடாய் சுழற்சி வருவதற்கு மத்திய நாட்களில் உருவாகிறது. அதாவது மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்போ அல்லது நான்கு நாட்களுக்குள்ளோ நிகழும். இந்த அண்டவிடுப்பின் போது முட்டை வெளியேறும்.
அவை கருப்பை குழாய்க்கு (fallopian tube) சென்று தேங்கியிருக்கும். இந்த சமயத்தில் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும்போது காத்திருக்கும் முட்டையால் அவை ஈர்க்கப்படலாம். அப்போது அது கரு முட்டையாக உருவாகி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு செல்லும் விந்தணுக்கள் ஐந்து நாட்கள் வரை உயிர் வாழும்.
உங்கள் அண்டவிடுப்பு நாட்களை சரியாக கணக்கிட சில நம்பகமான ஆப்ஸ் உள்ளன. அவை உங்கள் மாதவிடாயை கணக்கிடும். இல்லையெனில் நீங்களாகவே உங்கள் தினசரி காலண்டரில் குறிப்பிட்டு கொள்ளலாம். ஒவ்வொரு சுழற்சியும் உங்கள் மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு முடிவடையும்.உங்கள் சுழற்சியின் நடுப் புள்ளி அதாவது மத்திய நாட்களை குறியுங்கள். உங்களுக்கு 28 நாட்கள் சுழற்சி இருந்தால் 14 வது நாளில் நீங்கள் கருவுறுவீர்கள்.