NoFap நடத்திய ஆய்வில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் உடலுறவில் ஈடுபாட்டைக் குறைக்கும் என்கிறது. அந்த ஆய்வில் 25% செக்ஸில் ஈடுபாடு இல்லாமலும், 19% உடனே விந்து வெளியேறும் குறைப்பாடு கொண்டவராகவும், 34% ஆண்குறி விரைப்பில் குறைபாடு என இப்படி பல காரணங்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த ஆய்வு சிறந்த உதாரணத்தையும் அளிக்கிரது. அதில் மது அடிமை என்றால் அடுத்து அடுத்து என மேலும் குடிக்கத் தூண்டும். ஆனால் ஆபாச வீடியோக்களுக்கு அடிமை என்றால் அதை விட சிறப்பாக கிடைக்காதா என்ற தேடலே அடுத்தடுத்து இருக்கும். அந்த தேடுதல் திருப்தி அடையாததாக இருக்கும். அதனால்தான் ஆபாச வீடியோக்களுக்கு அதிக அளவில் அடிமையாவதாக தெரிவித்துள்ளது.